1 – 8 ஓடும் புள்

எட்டாந் திருமொழி

(2976)

ஓடும்புள்ளேறி, சூடும தண்டுழாய்,

நீடு நின்றவை, ஆடும் அம்மானே.

விளக்க உரை

(2977)

அம்மானாய்ப் பின்னும், எம்மாண புமானான,

வெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே.

விளக்க உரை

(2978)

கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,

தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே.

விளக்க உரை

(2979)

வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,

நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே.

விளக்க உரை

(2980)

வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான்,

பொய்கலவாது, என் – மெய்கலந்தானே.

விளக்க உரை

(2981)

கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,

புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே.

விளக்க உரை

(2982)

கொண்டா னேழ்வி டை, உண்டா னேழ்வையம்,

தண்டா மஞ்செய்து, என்  எண்டா னானானே.

விளக்க உரை

(2983)

ஆனா னானாயன், மீனோ டேனமும்,

தானா னானென்னில், தானா யசங்கே.

விளக்க உரை

(2984)

சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,

எங்கும் தானாய, நங்கள் நாதனே.

விளக்க உரை

(2985)

நாதன்ஞாலங்கொள்  பாதன்,என்னம்மான்,

ஓதம் போல்கிளர், வேதநீரனே.

விளக்க உரை

(2986)

நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,

நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top