9 – 7 எங்கானல்

(3847)

எங்கானலகங்கழிவாய் இரைதேர்ந்திங்கினிதமரும்

செங்காலமடநாராய் திருமுழிக்களத்துறையும்

கொங்கார்பூந்துழர்முடி யெங்குடக் கூத்தர்க்கென்தூதாய்

முங்கால்களென்தலைமேல் கெழுமிரோநுமரோடே.

விளக்க உரை

(3848)

நுமரோடும்பிரியாதே நீரும்நும்சேவலுமாய்

அமர்காதல் குருகினங்காள் அணிமுழிக்களத்துறையும்

எமலாரும் பழிப்புண்டு இங்கென்? தம்மாலிழிப்புண்டு

தமரோடங்குறைவார்க்குத் தக்கிலமேகேளீரே.

விளக்க உரை

(3849)

தக்கிலமேகேளீர்கள் தடம்புனல்வாயிரைதேரும்

கொக்கினங்காள் குருனிங்காள் குளிர்மூழிக்களத்துறையும்

செக்கமலர்த்தவர்போலும் கண்கைகால்செங்கனிவாய்

அக்கமலத்திலைபோலும் திருமேனியடிகளுக்கே.

விளக்க உரை

(3850)

திருமேனியடிகளுக்குத் தீவினையேன்விடுதூதாய்

திருமூழிக்களமென்னும் செமுநகர்வாயணிமுகில்காள்

திருமேனியவட்கருளீர் என்றக்கால் உம்மைத்தம்

திருமேனியோளியகற்றித் தெளிவிசும்புகடியுமே.

விளக்க உரை

(3851)

தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும்

ஒளிமுகில்காள திருமுழிக்களத்துளையுமொண்சுடர்க்கு

தெளி விசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும்

துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல் செப்புமினே

விளக்க உரை

(3852)

தூதுரைத்தல்செப்புமின்கள் தூமொழிவாய்வண்டினங்காள்

போ திரைத்துமதுநுகரும் பொழில்முழிக்களத்துறையும்

மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்ககென்வாய்மாற்றம்

தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே.

விளக்க உரை

(3853)

சுடர்வளையுங்கலையுங்கொண்ட அருவினையேன்தோற்துறந்த

படர்புகாழான் திருமூழிக்களத்துறையும்பங்கயக்கண்

சுடர்பவளவாயனைக்கண்டு ஒருநாளோர்தூய்மாற்றம்

படர்பொழில்வாய்க்குருகினங்காள் எனக்கொன்றுபணியீரே.

விளக்க உரை

(3854)

எனக்கொன்றுபணியீர்கள் இரும்பொழிவாயிரைதேர்ந்து

மனக்கின்பம்படமேவும் வண்டினங்காள்தும்பிகாள்

கனக்கொள்திண்மதீர்படைசூழ் திருமூழிக்களத்துறையும்

புனக்கொள்காயாமேனிப் பூந்தழாய்முடியார்க்கே.

விளக்க உரை

(3855)

பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு

ஏந்துநீரிளங்குருகே திருமுழிக்களத்தாருக்கு

ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்ககண்ணீர்ததும்ப

தாந்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றேன்றுரையீரே.

விளக்க உரை

(3856)

தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து

மிகலின்பம்படமேவும் மென்னடையவன்னங்காள்

மிகமேனிமெலிவெய்தி மேகலையுமிடழிந்து என்

அகமேனியொழியாமே திருமுழிக்களத்தார்க்கே

விளக்க உரை

(3857)

ஒழிலின்றித்திருமூழிக்களத்துரையு மொண்சுடரை

ஒழிவில்லாவணிமழலைக் கிளிமொழியாலைவற்றியசொல்

வழுவில்லாவண்குகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த

அழிவில்லாவாயிரத்து இப்பந்தும கோயனுக்குமே

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top