(3855)
பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு
ஏந்துநீரிளங்குருகே திருமுழிக்களத்தாருக்கு
ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்ககண்ணீர்ததும்ப
தாந்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றேன்றுரையீரே.
பதவுரை
|
நீர் ஏந்து இள குருகே |
– |
நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே |
|
பூ துழாய் முடியார்க்கு |
– |
திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும் |
|
பொள் ஆழி கையாருக்கு |
– |
அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும் |
|
திருமூழிக்களத் தாருக்கு |
– |
திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு |
|
பூண் ஏந்து முலை பயந்து |
– |
ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து |
|
என் இணை மலர் நீர்ததும்ப |
– |
மலர்போன்ற எனது கண்ணைகள் நீர்மல்கும்படி |
|
தாம் தம்மை கொண்டு அகல்தல் |
– |
அவர்தாம் தம்முடைய திருமேனியையுங்கொண்டு அகன்று போவதானது |
|
நகவு அன்று என்று உரையீர் |
– |
தருமமன்று என்று சொல்லுங்கோள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில். “தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரை” எனகிற [ஈற்றடி] வார்த்தை மிகவியத்தக்கது; எம்பெருமான் என்னைவிட்டுப் பிரிந்து போம்போது தன்னுடைய திருமேனியை இங்கு வைத்திட்டன்றோ போயிருக்கவேண்டும்; அந்தத் திருமேனியையுங்கொண்டு அகன்று போனாரே, இது தகவேலவென்று கேளுங்கோளென்று குருகினங்களை நோக்கிக் கூறுகின்றாள். உலகில் விநோதமாகப் பேசுகிறவர்கள் “நடந்தால் உடலும் கூடக்கூட வருகிறது, இதுதான் எனக்குப்பெரிய வியாதி” என்று சொலுவதுண்டு ; இதுவொரு ஹாதஸ்பவசன்மாகக் கொள்ளப்படுகிறது. இந்த முறையில்தானுள்ளது இங்கு ஆழ்வாருடைய வாசகமும். ‘தாம் போகவேணுமானால் தம்மை வைத்துவிட்டுப் போகவேண்டாவோ’ என்கிற இவ்வார்த்தையின் கருத்து இவ்வளவே–அவர் இறைப்பொழுதும் பிரிந்துபோகவேதகாது என்பதாம்; அவருடைய பிரிவு ஆற்றவொண்ணாததென்பதை முதலடியால் முதலிக்கிறார்; பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு=அவர் திருமுடியிலே திருத்துழாய் மாலை சாத்திக்கொண்டிருக்குமழகு ஒன்றுபோதுமே; அதற்குமேல் கையுந்திருவாழியுமானவழகு “சுடராழியும் பல்லாண்டு” என்று ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோவுள்ளது; இவ்வழகுகளை நினைத்தன்றோ நான் வைவர்ணியமடைந்தும் கண்ணீர் சோர்ந்தும் நிற்பது; இந்நிலையைச் சென்று சொல்லவேணுமென்றாளாயிற்று.
English Translation
O Tender water-egret! The Lord wears a Tulasi crown and wields a golden discus in Tirumulikkalam, My jewel-worthy breasts have paled, tears flood my lotus eyes. Tell him that his keeping away from me is just not right
