(3855)

(3855)

பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு

ஏந்துநீரிளங்குருகே திருமுழிக்களத்தாருக்கு

ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்ககண்ணீர்ததும்ப

தாந்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றேன்றுரையீரே.

 

பதவுரை

நீர் ஏந்து இள குருகே

–

நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே

பூ துழாய் முடியார்க்கு

–

திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும்

பொள் ஆழி கையாருக்கு

–

அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும்

திருமூழிக்களத் தாருக்கு

–

திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு

பூண் ஏந்து முலை பயந்து

–

ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து

என் இணை மலர் நீர்ததும்ப

–

மலர்போன்ற எனது கண்ணைகள் நீர்மல்கும்படி

தாம் தம்மை கொண்டு அகல்தல்

–

அவர்தாம் தம்முடைய திருமேனியையுங்கொண்டு அகன்று போவதானது

நகவு அன்று என்று உரையீர்

–

தருமமன்று என்று சொல்லுங்கோள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில்.  “தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரை” எனகிற [ஈற்றடி] வார்த்தை மிகவியத்தக்கது;  எம்பெருமான் என்னைவிட்டுப் பிரிந்து போம்போது தன்னுடைய திருமேனியை இங்கு வைத்திட்டன்றோ போயிருக்கவேண்டும்;  அந்தத் திருமேனியையுங்கொண்டு அகன்று போனாரே, இது தகவேலவென்று கேளுங்கோளென்று குருகினங்களை நோக்கிக் கூறுகின்றாள்.  உலகில் விநோதமாகப் பேசுகிறவர்கள் “நடந்தால் உடலும் கூடக்கூட வருகிறது, இதுதான் எனக்குப்பெரிய வியாதி” என்று சொலுவதுண்டு ; இதுவொரு ஹாதஸ்பவசன்மாகக் கொள்ளப்படுகிறது.  இந்த முறையில்தானுள்ளது இங்கு ஆழ்வாருடைய வாசகமும். ‘தாம் போகவேணுமானால் தம்மை வைத்துவிட்டுப் போகவேண்டாவோ’ என்கிற இவ்வார்த்தையின் கருத்து இவ்வளவே–அவர் இறைப்பொழுதும் பிரிந்துபோகவேதகாது என்பதாம்;  அவருடைய பிரிவு  ஆற்றவொண்ணாததென்பதை முதலடியால் முதலிக்கிறார்;  பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு=அவர் திருமுடியிலே திருத்துழாய் மாலை சாத்திக்கொண்டிருக்குமழகு ஒன்றுபோதுமே; அதற்குமேல் கையுந்திருவாழியுமானவழகு “சுடராழியும் பல்லாண்டு” என்று ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோவுள்ளது;  இவ்வழகுகளை நினைத்தன்றோ நான் வைவர்ணியமடைந்தும் கண்ணீர் சோர்ந்தும் நிற்பது;  இந்நிலையைச் சென்று சொல்லவேணுமென்றாளாயிற்று.

 

English Translation

O Tender water-egret!  The Lord wears a Tulasi crown and wields a golden discus in Tirumulikkalam, My jewel-worthy breasts have paled, tears flood my lotus eyes.  Tell him that his keeping away from me is just not right

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top