9 – 4 மையார்

(3814)

மையார்கருங்கண்ணி கமலமலர்மேல்

செய்யாள் திருமார்லினில்சேர் திருமாலே

செய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும்

கையா உன்னைக்காணக் கருதுமென்கண்ணே.

விளக்க உரை

(3815)

கண்ணேயுன்னைக் காணக்கருதி என்னெஞ்சம்

எண்ணேகொண்ட சிந்தையநாய்நின்றியம்பும்

விண்ணோர் முனிவர்க்கென்றும் காண்பரியாயை

நண்ணாதொழியேனென்று நானழைப்பனே.

விளக்க உரை

(3816)

அழைக்கின்றவடிநாயேன் நாய்கூழைவாலால்

குழைக்கின்றதுபோல என்னுள்ளம்குழையும்

மழைக்கன்று குன்றமெடுத்து ஆநிரைகாத்தாய்

பிழைக்கின்றதருளென்று பேதுறுவனே.

விளக்க உரை

(3817)

உறுவதிதுவென்று உனக்காட்பட்டு நின்கண்

பெறுவதெதுகொலென்று பெதையேன்நெஞ்சம்

மறுநல்செய்யும் வானவர்தானவர்க்கென்றும்

அறிவதரிய அரியாயவம்மானே.

விளக்க உரை

(3818)

அரியாயவம்மானை அமரர்பிரானை

பெரியனைப் பிரமனை முன்படைத்தானை

வரிவாளரவினணைப் பள்ளிகொள்கின்ற

கரியானகழல்காணக் கருதும்கருத்தே.

விளக்க உரை

(3819)

கருத்தே உன்னைக்காணக்கருதி என்னெஞ்சத்

திருத்தாகவிருத்தினேன் தேவர்கட்கெல்லாம்

விருத்தா விளங்குஞ்சுடர்சோதி உயரத்

தொருத்தா உன்னையுள்ளு மென்னுள்ளமுகந்தே.

விளக்க உரை

(3820)

உகந்தேயுன்னை உள்ளுமென்னுள்ளத்து

அகம்பாலகந்தானமர்ந்தே இடங்கொண்டவமலா

மிகுந்தானவன்மார்வகலம் இருகூறா

நகந்தாய் நரசிங்கமதாயவுருவே.

விளக்க உரை

(3821)

உருவாகிய ஆறுசமயங்கட்கெல்லாம்

பொருவாகி நின்றானவன் எல்லாப்பொருட்கும்

அருவாகியவாதியைத் தேவர்கட்கெல்லாம்

கருவாகியகண்ணனைக் கண்டுகொண்டேனே.

விளக்க உரை

(3822)

கண்டுகொண்டு என் கண்ணிணையாரக்களித்து

பண்டைவினையாயின பற்றோடறுத்து

தொண்டர்க்கமுதுண்ணச்சொல்மாலைகள் சொன்னேன்

அண்டத்தமரர்பெருமான் அடியேனே.

விளக்க உரை

(3823)

அடியானிவனென்று எனக்காரருள்செய்யும்

நெடியானை நிரைபுகழஞ் சிறைப்புள்ளின்

கொடியானை குன்றாமல் உலகமளந்த

அடியானை அடைந்தடியேனாய்ந்தவாறே.

விளக்க உரை

(3824)

ஆறாமதயானை அடர்த்தவன்தன்னை

சேறார்வயல் தென்குருகூர்ச்சடகோபன்

நூறேசொன்ன ஓராயிரத்துளிப்பத்தும்

ஏறேதரும் வானவர்தமின்னுயிர்க்கே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top