9 – 9 மல்லிகை

(3869)

மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ வண்குறிஞ்சி யிசைத வருமாலோ

செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ

அல்லி யந்தாமரைக் கண்ண னெம்மான் ஆயர்க ளேரியே றெம்மாயோன்

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிட மறிகிலம் தமியமாலோ.

விளக்க உரை

(3870)

புகலிடமறிகிலம்தமியமாலோ புலம்புறுமணிதென்றலாம்பலாலோ

பகலடுமாலைவண்சாந்தமாலோ பஞ்சமம் முல்லை தண்வாடையாலோ

அகலிடம்படைத்திடந்துண்டுமிழ்ந்தளர்ந்து எங்குமளிக்கின்றவாயன்மாயோன்

இகலிடத்தசுரர்கள்கூற்றம் வாரான் இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்.

விளக்க உரை

(3871)

இனியிருதென்னுயிர்காக்குமாறென் இணைமுலைநமுக நுண்ணிடைநுடங்க

துனியிருங்கலவிசெய்தாகந்தோய்ந்து துறந்தெம்மையிட்டகல் கண்ணன்கள்வன்

தனியிளஞ்சிங்கமெம்மாயன்வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்

பனியிருங்குழல்களும்நான்குதோளும் பாலியேன் மனத்தேநின்றீருமாலோ.

விளக்க உரை

(3872)

பாவியேன் மனத்தேநின்றீருமாலோ வாடைதண்வாடை வெவ்வாடையாலோ

மேவுதண்மதியம் வெம்மதியமாலோ மென்மலர்பபள்ளி வெம்பள்ளியாலோ

தூவியம் புள்ளுடைத்தெய்வண்டுதுதைந்த எம்பெண்மையம் பூவி தாலோ

ஆவியின் பரமல்லவகைகளாலோ யாமுடைநெஞ்சமும் துணையன்றாலோ.

விளக்க உரை

(3873)

யாமுடை நெஞ்சமும்துணையன்றாலோ ஆபுகுமாலையுமா கின்றாலோ

யாமுடை ஆயன்றன்மனம் கல்லாலோ அவனுடைத்தீங் குழலீருமாலோ.

யாமுடைத்துணையென்னும் தோழிமாருமெம்மில் முன்னவனுக்கு மாய்வராலோ

யாமுடையாருயிர்காக்குமாறென் அவனுடையருள் பெறும்போதரிதே.

விளக்க உரை

(3874)

அவனுடையருள் பெறும்போதரிதால் அவ்வருளல்லனவருளுமல்ல

அவனருள் பெறுமளவாவிநில்லாது அடுபகல் மாலையும் நெஞ்சுங்காணேன்

சிவனொடுபிரமன் வண்டிருமடந்தை சேர்திருவாகமெம்மாவியிரும்

எவமினிப்புகுமிடமெவம் செய்கேனோ ஆருக்கென் சொல்லுகேனன்னைமீர்காள்.

விளக்க உரை

(3875)

ஆருக்கென் சொல்லுகேனன்னைமீர்காள் ஆருயிரளவன்றிக் கூர்தண்வாடை

காரோக்குமேனி நங்கண்ணன் கள்வம் கவர்ந்தவத்தனி நெஞ்சமவன்கணஃதே

சீருற்றவகில்புகையாழ்நரம்பு பஞ்சமம் தண்பசும்சாந்தணைந்து

போருற்றவாடைதண் மல்லிகைப்பூப் புதுமணமுகந்து கொண்டேறியுமாலோ.

விளக்க உரை

(3876)

புதுமணமுகந்துகொண்டெறியுமாலோ பொங்கிளவாடை புன்செக்கராலோ

அதுமணந்தகன்ற நங்கண்ணன்கள்வம் கண்ணனிற்கொடி தினியதனிலும்பர்

மதுமணமல்லிகைமந்தக்கோவை வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து

அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே யூதுமத்தீங் குழற்கேயுய்யேன் நான்.

விளக்க உரை

(3877)

ஊதுமத்தீங்குழற்கேயுய்யேன் நானது மொழிந்திடையிடைத் தன் செய்கோலத்

தூதுசெய்கண்கள் கொண்டொன்று பேசித் தூமெழியிசைகள் கொண்டொன்றுநோக்கி

பேதுறுமுகம்செய்துநொந்துநொந்து பேதைநெஞ்சற வறப்பாடும்பாட்டை

யாதுமொன்றறிகிலமம்மவம்ம மாலையும் வந்து மாயன்வாரான்.

விளக்க உரை

(3878)

மாலையும் வந்தது மாயன் வாரான் மாமணிபுலம்பவல்லேறணைந்த

கோலநன்னாகுகளுகளுமாலோ கொடியன குழல்களும்குழறுமாலோ

வமலொளிவளர்முல்லை கருமுகைகள் மல்லிகை யலம்பிவண்டாலுமாலோ

வேலையும் விசும்பில்விண்டலறுமாலோ என் சொல்லியுய்வனிங்கவனைலிட்டே.

விளக்க உரை

(3879)

அவனைவிட்டகன்றுயிராற்றகில்லா அணியிழையாச்சியர் மாலைப்பூசல்

அவனை விட்ட கல்வதற்கேயிரங்கி யணி குருகூர்ச்சடகோபன்மாறன்

அவனியுண்டுமிழ்ந்தவன் மேலுரைத்த ஆயிரந்துள்ளிவைபத்தும் கொண்டு

அவனியுளலற்றிநின்றுய்மின் தொண்டீரச்சொன்ன மாலைநண்ணித்தொழுதே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top