(3879)
அவனைவிட்டகன்றுயிராற்றகில்லா அணியிழையாச்சியர் மாலைப்பூசல்
அவனை விட்ட கல்வதற்கேயிரங்கி யணி குருகூர்ச்சடகோபன்மாறன்
அவனியுண்டுமிழ்ந்தவன் மேலுரைத் த ஆயிரந்துள்ளிவைபத்தும் கொண்டு
அவனியுளலற்றிநின்றுய்மின் தொண்டீரச்சொன்ன மாலைநண்ணித்தொழுதே.
பதவுரை
|
அவனை விட்டு அகன்று |
– |
கண்ண பிரானை விட்டுப் பிரிந்து |
|
உயிர் ஆற்றகில்லா |
– |
உயிர் தரிக்கமாட்டாத |
|
அணி இழை ஆராய்ச்சியர் |
– |
அழகிய ஆபரணங்களணிந்த கோபிமார்கள் |
|
மாலை பூசல் |
– |
மாலைப் பொழுதிலே பட்ட பாட்டை |
|
அவனை விட்டு அவல்வதற்கே இரங்கி |
– |
அப்பெருமானை விட்டு பிரிந்திருக்கை காரணமாக நோவுபட்டு |
|
அணி குருகூர் சடகோபன் மாறன் |
– |
ஆழ்வார் |
|
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த |
– |
பூமிணை உண்டுமிழ்ந்த அப்பெருமான் விஷயமாக அருளிச் செய்த |
|
ஆயிரத்ததுள் இவை பத்தும் கொண்டு |
– |
ஆயிரத்தினுள் இப்பதிகங் கொண்டு |
|
தொண்டீர் |
– |
தொண்டர்களே |
|
அவனியுள் அலற்றி நின்று |
– |
பூமிக்குள்ளே உகந்து அநுஸந்தித்து |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– வண்துவரைப் பெருமாளைப் பிரிந்து தரிக்கமாட்டாமல் அந்நியம் போதில் அணியிழையாய்ச்சியர்கள் திரளநின்று கூப்பிட்டாப்போலே ஆழ்வாரும் அவனைப் பிரிந்து தரிக்கமாட்டாமை கூப்பிட்டலற்றின இத்திருவாய்மொழி தொண்டர்களுக்கு உஜ்ஜீவனஸாதன மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. “இப்பதிகம் தொண்டர்களுக்கு உஜ்ஜீவனத்தைத் தரும்” என்றிங்ஙனே பலக்ருதியாகச் சொல்லாமல் “தொண்டீர் உய்மின்” என்று சொல்லியிருந்தாலும் பயனுரைக்கும் வகைகளிலே இதுவுமொருவகையென்று கொள்க இப்பாரைத்தைக் கற்பார்க்கு என்னைப் போலே கூப்பிடவேண்டா; ஆசைப்பட்ட பேறுபெறுகையில் கண்ணழிவில்லை என்றவாறு.
English Translation
This decad of the thousand sweet songs on the Lord who swallowed the Earth, by Kurugur city’s Maran Satakopan, desolate on separation from the Lord recalls the wall of a Gopi separated from the Lord at dusk. Devotees, sing this well as worship and rule the Earth
