(2781)
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை, அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,
நென்னலை யின்றினை நாளையை, – நீர்மலைமேல்
(2782)
மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
தென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில்
(2783)
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, – நான்வணங்கும்
(2784)
கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை, கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை யெல்லாம் அறிவித் தால் எம்பெருமான், தன்னருளும் ஆகமும் தாரானேல், – தன்னைநான்
(2785)
மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும், தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன்
(2786)
தான்முனநாள்
மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண், துன்னு படல்திறந்து புக்கு, – தயிர்வெண்ணெய்
(2787)
தன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண் மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றல்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும், அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை, முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்..
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய், தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,
மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப, கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,
என்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும் தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,
மன்னன் இராவணன்றன் நல்தங்கை, – வாளெயிற்றுத்
(2788)
துன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால், தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,
மன்னிய திண்ணெனவும் வாய்த்த மலைபோலும், தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்
(2789)
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும் –மற்றிவைதான்
(2790)
உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான், முன்னி முளைத்தெழுந்தோங்கி யொளிபரந்த,
மன்னியம்பூம் பெண்ணை மடல்.