(2721)
முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற, அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, – பொங்கொளிசேர்
(2722)
கொல்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,
மன்னிய சிங்கா சனத்தின்மேல், – வாணொடுங்கண்
(2723)
கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து ,ஆங் கின்னளம்பூந் தென்றல் இயங்க, – மருங்கிருந்த
(2724)
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல், முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,
அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர், பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை, இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,
மன்னிய மாமயில்போல் கூந்தல், – மழைத்தடங்கண்
(2725)
மின்னி டையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின், மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள், அன்ன நடைய அரம்பய ர்த்தம் வகைவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, – இருவிசும்பில்
(2726)
மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல், மன்னும் மளிவிளக்கை மாட்டி, – மழைக்கண்ணார்
(2727)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல், துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச், சின்ன நறுந்தாது சூடி, – ஓர் மந்தாரம்
(2728)
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின் மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல் நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, – தாங்கருஞ்சீர்
(2729)
மின்னி டைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல், பொன்னரும் பாரம் புலம்ப, – அகங்குழைந்தாங்
(2730)
இன்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார், அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,
இன்னமுதம் மாந்தி யிருப்பர், – இதுவன்றே