பெரிய திருமடல் திருமொழி – 1

(2711)

மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின், சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,

மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச,

துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,

விளக்க உரை

(2712)

என்னும் விதானத்தின் கீழால், –

இருசுடரை மன்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும் பன்னு திரைக்கவரி வீச, – நிலமங்கை

விளக்க உரை

(2713)

தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல், மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,

என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, – மழைக்கூந்தல்

விளக்க உரை

(2714)

தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையா வடிவமைந்த,

அன்ன நடைய அணங்கே, – அடியிணையைத்

விளக்க உரை

(2715)

தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர் உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட

பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர், மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்

முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறைதான்

விளக்க உரை

(2716)

மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில், நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, – நான்கினிலும்

விளக்க உரை

(2717)

பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது, ஓர் தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,

என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி, துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், – வெஞ்சுடரோன்

விளக்க உரை

(2718)

மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும், இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து,

தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால், இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,

என்னவும் கேட்டறிவ தில்லை உளதென்னில்

விளக்க உரை

(2719)

மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,

அன்னதோர் இல்லியி னூடுபோய், – வீடென்னும்

விளக்க உரை

(2720)

தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,

அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங் கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, – அதுநிற்க,

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top