நான்முகன் திருவந்தாதி திருமொழி – 1

(2382)

நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்

தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், – யான்முகமாய்

அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,

சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.

விளக்க உரை

(2383)

தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்

ஆருமறியார் அவன்பெரு மை, – ஓரும்

பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்

அருள்முடிவ தாழியான் பால்.

விளக்க உரை

(2384)

பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,

ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், – ஞாலத்

தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்

அருபொருளை யானறிந்த வாறு?

விளக்க உரை

(2385)

ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,

கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, – வேறொருவர்

இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்

சொல்லானைச் சொன்னேன் தொகுத்து.

விளக்க உரை

(2386)

தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,

வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, – உகத்தில்

ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,

அருநான்கு மானாய் அறி.

விளக்க உரை

(2387)

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,

சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்

ஈனவரே யாதலால் இன்று.

விளக்க உரை

(2388)

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்

நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே

நீயென்னை யன்றி யிலை.

விளக்க உரை

(2389)

இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற

சிலைகொண்ட செங்கண்மால் சேரா – குலைகொண்ட

ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த

கூரம்பன் அல்லால் குறை.

விளக்க உரை

(2390)

குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து

மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, – கறைகொண்ட

கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்

அண்டத்தான் சேவடியை ஆங்கு.

விளக்க உரை

(2391)

ஆங்கார வாரம் அது கேட்டு, அழலுமிழும்

பூங்கார் அரவணையான் பொன்மேனி, – யாங்காண

வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்

வல்லரே யல்லரே வாழ்த்து.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top