(3993)

(3993)

ளும்ப ரந்தண் பாழேயோ. அதனுள்மிசை நீயேயோ

அம்பர நற்சோதி. அதனுள் பிரமன் அரன் நீ

ளும்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன்நீ

எம்பரம் சாதிக்க லுற்றென்னைப் போரவிட் டிட்டாயே

 

பதவுரை

ளும்பர்அம் தண் பாழேயோ

மூல ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனானவனே!

அதனுள் மிசை நீயேயோ

அந்தப்ரக்ருதிக்குள்ளே நிற்கிற ஆத்ம தத்வத்துக்கு நிர்வாஹகனானவனே!

அம்பரம் நல்சோதி அதனுள் பிரமன் அரண் நீ

ஆகாசம் முதலானவற்றுக்கும் அண்டத்துக்குள்ளேயிருக்கிற பிரமன் சிவன் முதலான வர்களுக்கும் நிர்வாஹன் நீ;

ளும்பரும்

மேலான தேவர்களையும்

யாதவரும்

மநுஷ்யாதி ஸகலசேதநரையும்

படைத்த முனிவன் அவன் நீ

அவரவர்களது கருமங்களை மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ;

(இப்படியாயிருக்க)

எம் பரம்  சாதிக்கல் உற்று

என் சாரியம் நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு

(இவ்வளவும் வர நிறுத்தி)

என்னை போர விட்டிட்டாயே

என்னை இங்கேயே பொகட்டுவைத்தாயே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

-ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார். ளும்பரந்தண் பாழேயோ என்பதனால் மூலப்ரக்ருதிநிர்வாஹத்வம் சொல்லுகிறது. பாழ்நிலமாயிருக்குமதிலே எதையும் பயிர் செங்துகொள்ளலாமாப் போலே சேதநா;க்கு போகமோகூஷங்களை விளைவித்துக் கொள்ளலாம் நிலமாயிரா நின்ற மூலப்ரக்ருதியைப் பாழ் என்ற சொல்லாற் சொல்லுகிறது. ளும்பர்என்றும் அம்தண் என்றும் அதனுடைய மேன்மை சொல்லும் விசேஷணங்கள். அதனுள் மிசைநீயே-ளும்பரந் தண் பாழ் என்று கீழே சொல்லப்பட்ட ப்ரக்ருதியிலே கட்டுப்பட்டு நிற்கிற ஆத்மவர்க்கங்களுக்கும் நிவாஹகனானவனே! என்றபடி. ஆக முதலடியால் சேதநாசேதநங்களை சாரிரமாகக் கொண்டவனே! என்றதாயி;ற்று.

 

English Translation

O Dark expanse-of-space, and all that is in it!  You are the sky, the light, the gods and all else, you are the first-cause of gods and men.  Alas, you have left me to bear my burden alone

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top