(3861)

(3861)

நாளேலறியேன் எனக்குள்ளநானும்

மீளாவடிமைப் பணிசெய்யப்புகுந்தேன்

நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்

வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா.

 

பதவுரை

நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்

ஓங்கி நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயிலே (எழுந்தருளியிருக்கிற)

வாள் ஏய் தட கண்

வாள் போன்ற பெரிய கண்களையுடையளாய்

மட பின்னை மணாளா

நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனே!

நானும்

அடியேனும்

மீளா அடிமை பணி செய்ய புகுந்தேன்

இடையறாத நித்ய கைங்கரியத்திலே நிரதனானேன்.

எனக்கு உள்ளன நான் அறியேன்

அறுக்கு எனக்கு நீ ஸங்கல் பித்துவைத்த நான் அறிகின்றிலேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– ஆத்மாவுள்ளவரையில் கைங்கரியம் பண்ணும்படி விஷயீகரிக்கப்பெற்ற நான் திருநாவாயில் நம்பின்னைப் பிராட்டியோடே கூடவிருக்கிற இருப்பிலே அடிமை செய்ப்பெறும் நாள் என்றோ!  அறிகிலேன் என்கிறார்.  நாளேலயியே னெனக்குள்ளன=நாள் பிநிந்து துக்கப்பட வேண்டிய நாள் இன்னுமெத்தனை நாளுண்டென்று அறிகின்றிலேன் என்றும், அனுபவிக்கப் பெறும் நாள் என்னைக்கென்று அறிகின்றிலேன் என்றும் இரண்டு வகையும் பொருள் கொள்ளலாம்.  நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன்=நித்ய ஸுரிகள் பண்ணும் யாவதாத்மபாவியான கைங்கரித்திலேயன்றோ நானும் அந்வயித்திருப்பது. நீளார் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்= கைங்கரியம் பண்ணுகைக்குப் புஷ்பம் முதலிய உபகரணங்களினால் குறையொன்று மின்றிக்கே யிருக்கிற திவ்ய தேச மென்றபடி. இத்திருவாய்மொழியில் பிராட்டி ஸம்பந்தம் அடிக்கடி அநுஸந்திக்கப்படுகிறது;  அதற்குக் காரணமருளிச் செய்கிறார் நம்பிள்ளை–”தேசாந்தரம்போன ப்ரஜை ஊர் அணித்தானவாறே தாய்மாரைப் பலகால் நினைக்குமாபோலே, ப்ராப்யதேசம் அணித்தானவாறே திரளவும் தனித்தனியும் பிராட்டிமாரை யநுஸந்திக்கிறார்” என்று.

 

English Translation

O Lord of Vel-eyed Nappinnai in Tirunavai amid groves! I know not how long I must stay here doing deeds of no return

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top