(3746)
வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,
எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்போதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,
பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே.
பதவுரை
|
மொய்த்து ஏய் திரை மோது |
– |
செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற |
|
தண் பாற்கடலுள் |
– |
குளிர்ந்த திருப்பாற்கடலிலே |
|
வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை |
– |
படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை |
|
மதியால் |
– |
அனுமதியாலே |
|
எனது உள்ளத்து அகத்தே |
– |
என்னெஞ்சிலுள்ளே |
|
வைத்தேன் |
– |
பொருந்த வைத்தேன், |
|
என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன் |
– |
இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார். பின்னடிகளை முன்னே அந்வயித்துக்கொண்டு பிறகு முன்னடிகளை அந்வயிப்பது. * அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து, பரவைத்திரை பலமோத்தப்பள்ளி கொள்கின்ற பிரான் * என்று பெரியாழ்வார் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றதாக விளங்கிற்று.
English Translation
I have placed in the recess of my heart the Lord who sleeps on a hooded serpent deep in the cool ocean of Milk. I shall never tire of contemplating him
