(3746)

(3746)

வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,

எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்போதும்,

மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,

பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே.

 

பதவுரை

மொய்த்து ஏய் திரை மோது

–

செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற

தண் பாற்கடலுள்

–

குளிர்ந்த திருப்பாற்கடலிலே

வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை

–

படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை

மதியால்

–

அனுமதியாலே

எனது உள்ளத்து அகத்தே

–

என்னெஞ்சிலுள்ளே

வைத்தேன்

–

பொருந்த வைத்தேன்,

என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன்

–

இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார். பின்னடிகளை முன்னே அந்வயித்துக்கொண்டு பிறகு முன்னடிகளை அந்வயிப்பது. * அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து, பரவைத்திரை பலமோத்தப்பள்ளி கொள்கின்ற பிரான் * என்று பெரியாழ்வார் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றதாக விளங்கிற்று.

 

English Translation

I have placed in the recess of my heart the Lord who sleeps on a hooded serpent deep in the cool ocean of Milk.  I shall never tire of contemplating him

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top