(3742)

(3742)

பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்

தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,

கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,

திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே.

 

பதவுரை

கரு மாணிக்கம் குன்றத்து

கருமாணிக்க மலையின் மேலே

தாமரை போல்

தாமரைக்காடு அவர்ந்தாற்போன்ற

திரு மார்வு கால் கண் கை செம்வாய் உந்தியான்

திருமார்பு முதலிய திவ்யாவயவங்களையுடையனான பெருமான்

மற்று பொருள் தன்னில்

மற்றுள்ள புருஷார்த்தங்களிலே

எனக்கும் ஓர் பொருள் சீர்க்கதரும் எல்

எனக்கும் ஒரு புருஷார்த்தத்தைத் தந்து விட்டானாகில்

பின்னை அவன்

பின்னே அவன் உயர்ந்த

தன்னை ஆர்க்கு கொடுக்கும்

புருஷார்த்தமான தன்னை ஆருக்குக் கொடுப்பான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தார் எம்பெருமான் பக்கலில் அபேக்ஷிப்பது இரண்டு வகைப்பட்டது, ஐச்வர்ய கைவல்யாதிகளான இதர புருஷார்த்தங்களை யபேக்ஷிப்பதென்பதொன்று, அவையொன்றும் வேண்டாதே “எமக்கு நீயே வேணும்“ என்று அவன்றன்னையே அபேக்ஷிப்பது மற்றொன்று. இவ்விதமாகவே, எம்பெருமான் உபகரித்தருளுகிறவிதமும் இரண்டுவகைப்பட்டது, சிலர்க்கு இதர புருஷார்த்தங்களைக் கொடுத்துவிடுதல், சிலர்க்குத் தன்னையே கொடுத்துவிடுதல். ஆழ்வார்க்கு அவன் உபகரிப்பது இதர புருஷார்த்தங்களையன்றே, தன்னையே யன்றோ கொடுப்பது. அது கிடைத்ததாகவன்றோ ஆழ்வாரும் களிப்பது. இப்படி, தன்னையே தமக்குத் தந்தருளினதானது, தன்னை வேறுயாரும் கொள்வாரில்லையென்பதனாலன்று, என் பக்கலுள்ள அபிநிவேசத்தாலே தந்தானென்கிறாரிப்பாட்டில்.

பொருள் தன்னில் மற்றுமோர் பொருள் எனக்குச் சீர்க்கத் தருமேல் –எம்பெருமான் தந்தருளும் புருஷார்த்தங்கள் பலபலவுண்டே, அவற்றுள் வேறேயொரு கனத்த புருஷார்தத்தை எனக்குத் தந்துவிட்டால், அவன் பின்னை யார்க்குத் தன்னைத் கொடுக்கும் – தானாகிற பொருளைக் கொடுப்பதற்கு வேறுயாருமில்லையா என்ன? ஏனில்லை? அவனும் கொடுப்பன், கொள்வாரும் பலருளர், அப்படியிருக்க எனக்குத் தன்னைக் கொடுத்தது தன்னுடைய அபிநிவேசாதியத்தாலே என்று சேஷபூரணம் செய்துகொள்க.

பின்னடிகள் எம்பெருமானுடைய இயற்கையாழகைக் கூறுவனவல்ல, தம்மோடுண்டான கலவியாலே அவனுடைய திவ்யாவயவங்களிற் பிறந்த புதுக்கணிப்பைப்பேசுவன் “கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்“ என்றது இல்பொருளுவமை (அபூதோபமை)

 

English Translation

If he gave me something else of value then whom would he give himself to?  He stands in me like a mountain-gem, with coral lips, lotus chest; limbs and eyes, and lotus nave!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top