(3743)

(3743)

செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு

எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,

செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,

அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே.

 

பதவுரை

செம் வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தன்னோடு

சிவந்தவாய் திருநாபி வெளுத்த திருமுத்து அழகிய மகரக்குழை ஆகிய அவற்றோடே கூட

எவ்வாய் சுடரும்

மற்றெல்லா அவயவங்களின் தேஜஸ்ஸும்

தம்மில் முன்வளாய்க் கொள்ள

ஒன்றுக் கொன்ன முற்பட்டுச் சூழ்ந்துகொள்ள

செம் வாய் முறுவரோடு

சிவந்த திருப்ப வளத்தின் முறுவலோடே கூட

எனது உள்ளத்து இருந்த

என்னெஞ்சினுள்ளே யிருக்கின்ற

அவ்வாய் அன்றி

அவ்வித மொழுய

மற்று அருள் யான் அறியேன்

வேறொன்றையும் நான் நினைக்கின்றிலே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து முறுவல் செய்து நிற்க, அத்திருப்பவளத்திலழகையனுபவித்துப் பேசுகிறார் இவ்வழகோடே என்னுள்ளே முறுவல் செய்திருக்கிறவிருப்பொழிய வேறொன்றையும் அறிகின்றிலேனென்கிறார். சிவந்த திருவதரமும் சிவந்த திருவுந்தியம் வெளுத்த திருமுத்தும் திருமகரக்குழையுமாகிற இவற்றோடே கூட மற்றைத் திவ்யாவயவ தேஜஸ்ஸும் ஒன்றுக்கொன்று முற்கோலிவந்து என்னை வளைத்துக்கொள்ள, இங்ஙனே பலபல அவயவங்களின் அழகு வில்வீசினாலும் என்னை நோக்கி அவன் முறுவல் செய்கையாகிறவிதொன்றே என்னுள்ளத்தை ஆகர்ஷியா நின்றது. என்றாராயிற்று.

 

English Translation

He stands before me with lotus navel, coral lips and pearl-white teeth, wearing radiant ear- rings, He is of exceeding effulgence, – Oh, with a smile I could embrace! He stays in my heart, I do not know a greater grace

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top