(3656)
ஆர்வனோ ஆழியங் கையெம்பி ரான்புகழ்,
பார்விண்நீர் முற்றும் கலந்து பருகிலும்,
ஏர்விலா என்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
சீர்பெற இன்கவி சொன்ன திறத்துக்கே?
பதவுரை
|
ஏர்வு இலா என்னை தன் ஆக்கி என்னுல் |
– |
தகுதியற்ற வென்னைத் தன்னேடொக்கவருள் செய்து |
|
தன்னை சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கு |
– |
என்னையிட்டுத் தன் விஷயத்தில் சிறப்புண்டாம்படி இனிய பாசுரங்களைச் சொன்னபடிக்கு |
|
ஆழி அம் கை எம்பிரான் புகழ் |
– |
சக்ரபாணியான அந்த எம்பெருமானுடைய திருப்புகழை |
|
பார்விண் நீர் முற்றும் கலந்து பருகினும் ஆர்வனே |
– |
மண்ணிலுள்ளாரும் கூறிராப்தியிலுள்ளாரும் ஒன்று சேர்ந்து புகழ நேர்ந்தாலும் நான் திருப்தியடைவேனே? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்னைக்கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட இந்த மஹா குணத்திற்கு உபயவிபூதியிலுமுள்ளாருடைய சக்தியையும் வாக்கு முதலிய உபகரணங்களையும் நானொருவனே பெற்று அநுபவித்தாலும் த்ருப்திபெறமாட்டேனென்கிறார்.
பார்விண்ணீர் முற்றுங் கலந்து பருகிலும் என்பதற்கு இரண்டுவகையாகத் தாற்பரியம் கொள்வர்; (1) எங்குமுள்ள சேதநர்களெல்லாரோடுங்கூடி (எல்லாருமாகச் சேர்ந்து) அநுபவித்தாலும் ஆர்வனோ! (2) எங்குமுள்ள எல்லாருடையவும் சக்தியையும் உவகரணங்களையும் கொண்டு அநுபவித்தால்தான் ஆர்வனோ!
English Translation
The Lord of discus made me his, gave me excellence, and sang his sweet songs. Even if I mix and drink the whole Earth, will if quench my thirst for singing?
