(3652)
அப்பனை யென்று மறப்பனென் னாகியே,
தப்புத லின்றித் தனைக் கவி தான்சொல்லி,
ஒப்பிலாத் தீவினை யேனையுய் யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே?
பதவுரை
|
என் ஆகியே |
– |
எனனைக் கொண்டே |
|
தப்புதல் இன்றி |
– |
ஒருவகையான அவத்யமும் தட்டாதபடி |
|
தனை தான் கவி சொல்லி |
– |
ஒப்பற்ற பாபியான என்னை |
|
உய்ய கொண்டு |
– |
உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி |
|
செப்பமே செய்து திரிகின்ற |
– |
எனக்கு ரக்ஷ்ணமே பண்ணிக்கொண்டு போருகிற |
|
சீர்கண்டு |
– |
சீலத்தைக் கண்டு வைத்து |
|
அப்பனை என்று மறப்பன் |
– |
அப்பெருமானை என்றைக்காவது மறக்க முடியுமோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
தானே தன்னைக் கவி பாடிக்கொண்டானாகில் ஒர் ஆச்சர்யமில்லை பாடுகைக்குப் பாங்கின்றியே யிருக்கிற வென்னைக் கொண்டு தப்புதலில்லாமல் கவிபாடின இந்த மஹோபகாரத்தை நான் எங்ஙனே மறக்கமுடியுமென்கிறார்.
“அப்பனை யென்று மறப்பன்” என்றவிடத்து ஈட்டில் -“உபகாரகனானவனை நான் என்று மறப்பன்? இனி அவன் உபகாரம்; பண்ணினால்தான் மறக்கப்போமோ?’ என்று (பழைய தெலுங்கு பதிப்பில்) பாடம் காண்கிறது, “இனி அவன் அபகாரம் பண்ணினால்தான்” என்று திருத்தவேணும். இருபத்தினாலாயிரப்படியில் – “இவ்வுபகாரம் பண்ணினவனை, இனி அபகாரம் பண்ணினால் தான் மறப்பேனோ?” என்கிற ஸ்ரீஸூக்தி காண்க. அப்பன் என்பதற்கு உபகாரகனென்று பொருள். “என்னாகியே தப்புதலின்றித்தனைக்கவி தான் சொல்லி” என்றவிடத்திற்கு எம்பார் அருளிச்செய்வராம்-“தான் பாடினானாகில் ஒரு தப்புமில்லாமல் தலைக்கட்டும்; நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருவிதமாகத் தலைக்கட்டலாகும்; இவ்விரண்டுமல்லாமல் என்னை உபகாரணமாகக்கொண்டு கவிபாடாநிற்கச் செய்தேயும் என் ஸம்பந்தத்தால் வந்த தோஷம் தடடாதபடி கவிபாடித் தலைக்கட்டினான்.” என்று.
ஒப்பிலாத் தீவனையேனை -ஸர்வஜ்ஞ்த்வம் ஸர்வசக்தத்வம் முதலானவற்றில் தான் ஒப்பிலாதவனாயிருக்குமாபோலே தீவினையில் நான் ஒப்பிலாதவனாயிருந்தேன். அப்படிப்பட்ட வென்னை, அடியோடு தீவினையின் நாற்றமே யறியாதவர்கள் பெறும் பேறு பெறுவித்தருளினானே! இஃதென்ன ஔதார்யமென்று ஈடுபடுகிறார்.
English Translation
Can I forget my father, who through my songs, has sung his own praise? He liberates me from beginningless Karma, and roams about ensuring my well-being
