(3643)

(3643)

மயக்கா வாமன னே! மதி யாம்வண்ணம் ஒன்றருளாய்,

அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய்,

வியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,

துயக்காய் நீநின்ற வரீவை யென்ன துயரங்களே.

 

பதவுரை

மயக்கா

எப்படிப்பட்டவாகளையும் மதி கெடும்படிபண்ணுமவனே!

வாமனனே

(அந்த சக்தியை) வாமநாவதாரத்தில் காட்டினவனே!

மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்

எனக்குக் கலக்கந் தீர்ந்து அறிவுண்டாம்படி அருளிச் செய்ய வேணும்;

துயர்ப்பு தேற்றமும் ஆய்

மறப்பும் தெளிவும் நீயிட்ட வழக்காய்

அழல் குளிர் ஆய்

தாபமும் குளிர்ச்சியும் நீயிட்டவழக்காய்

வியவு வியப்பு ஆய்

விஸ்மயநீயமும் விஸ்மயமும் நீயிட்ட வழக்காய்

வென்றிகள் ஆய்

(உலகில் விஜய ஸித்திகளும் நீயிட்ட வழக்காய்

வினை பயன் ஆய்

புண்ய பாபரூப கருமங்களும் அவற்றின் பலன்களும் நீயிட்ட வழக்காய்

பின்னும்

அதுக்குமேலே

துயக்கு நீ ஆய

இவற்றிலே சேதநர்கலங்குகிற கலக்கமும் நீயிட்டவழக்காய்

நீ நின்ற ஆறு இவை

நீ நிறகிற இந்த ப்ரகாரங்கள்

என்ன துயரங்கள்

என்ன கஷ்டங்களாயிருக்கின்றன!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

மயக்காவாமனனே—வடிவழகாலும் நடையழகாலும் பேச்சின் இனிமையாலும் மஹாபலியைப் பிச்சேற்றி நினைத்து முடித்துக்கொள்ளவல்ல விரகனன்றோ நீ; தேவர்களின் காரியம் செய்யப்போந்த நீ அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து உன்கையிலே நீரைவார்த்துத் தானே யிசைந்து தரும்படி மயங்கப் பண்ணினாயே!; மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி “என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண் மன்னாதருக” என்றவாறே’ தந்தேன் என்னப் பண்ணினாயே!; மதியாம் வண்ணம் ஒன்றருளாய்-அநுகூலர் பிரதிகூலர் என்கிற வாசியின்றிக்கே எல்லாரையும் மயங்கப்பண்ணுகை உரியதோ? நான் தெளிவையுடையேனாம்படி என்னைப் பண்ணியருளவேணும் என்கிறார்.

அயர்ப்பாய்த் தேற்றமுமாய்-பகவத்கீதையில் பதினைந்தாமத்யாயத்திலே “ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸம்நிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநஞ்கஷச” என்கிறான். ஒன்றையறிவதோ மறப்பதோ எல்லாம் நானிட்ட வழக்கென்கிறான். அழலாய்க் குளிராய்-சீதமும் உஷ்ணமும் தானிட்டவழக்கு. வியவாய் வியப்பாய்-ஆச்சரியப்படத்தக்க பொருள்களும் ஆச்சர்ய மென்கிற தருமமும் தானிட்ட வழக்கு. வென்றிகளாய்-வெற்றியைச் சொன்னது—பிரதிகோடியான தோல்வியையும் தெரிவிக்கும். ஜயாபஜயங்கள் தானிட்ட வழக்கென்கை, வினையாய்ப் பயனாய்-வினையென்று புணயபாப ரூபய்களான கருமங்களிரண்டையுஞ் சொல்லுகிறது. பயனென்று அவற்றின் பயனான ஸுகதுக்கங்களைச் சொல்லுகிறது.

பின்னும் நீ துயக்காநின்றவாறு –  அதற்குமேலே, உன்னை யடிபணிந்தாகும் மதிமயங்கும்படி நீநிற்கிறவிதம் என்னே!. இவை என்ன துயரங்களே! – இவையுனக்கு லீலையாயிருந்தாலும் உலகுக்குத் துயரமாயிருக்கின்றதே யென்கிறார்.

 

English Translation

O Deceiving Manikin! Pray tell me, that I may understand ignorance and knowledge, heat and cold, wonders and trivia, victory and despair, use and wastefulness are you; what travails are these?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top