(3642)
பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,
நீ வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே! அருளாய்,
காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,
மாயங்கள்¦ சய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே.
பதவுரை
|
வாசம் மலர் தண்துழாய் முடி மாயவனே |
– |
நறுமணம் மிக்க பூவையுடைய செவ்வித்திருத்துழாயை யணிந்த மயிர் முடியையுடைய ஆச்சரியனே!, |
|
நீ |
– |
இப்படிப்பட்ட நீ, |
|
என்னை பாசங்கள் நீக்கி |
– |
எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து |
|
உனக்கே அற கொண்டிட்டு |
– |
உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து |
|
காயமும் சீவனும் |
– |
பந்தமான சரீரமும் பத்த ஜீவனும் |
|
கழிவு பிறப்பு ஆய் |
– |
இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க, |
|
பின்னும் |
– |
பின்னையும் |
|
நீ மாயங்கள் செய்து வைத்தி |
– |
அவித்யா கர்மவாஸநாருசிகளாகிற வஞ்சனங்களைப பண்ணிவையா நின்றாய்; |
|
இவை என்ன மயக்குக்கள் |
– |
இவை என்ன வ்யாமோ ஹகங்களாயிருக்கின்றன! |
|
அருளாய் |
– |
அருளிச்செய்ய வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பதிகத்தின் ப்ரமேயத்திற்குத் தலைமையான பாசுரமிது. என்னை ஆதியிலே விசேஷகடாக்ஷிம் பண்ணிவைத்துப் பின்னையும் எனக்குப் பொருந்தாதபடியான ஸம்ஸாரத்திலே வைத்து நடத்திக்கொண்டு போருகிற இவ்வாச்சரிய மிகுந்த படியை எனக்கருளிச் செய்யவேணுமென்கிறார்.
பாசங்கள் நீக்கி யென்றது – மயர்வறமதிநலமருளியென்றபடி. உனக்கே அறக்கொண்டிட்டு—துயரறுசுடரடிதொழுதெழு என்னும்படி பண்ணியென்றபடி.
வாசமலர்த் தண்டுழாய்முடிமாயவனே!—புறம்புண்டான பற்றுக்களை யறுத்ததும் தனக்கே யற்றுத் தீரும்படி பண்ணினதும் திருமுடியிலே சாத்தின் திருத்துழாய் மாலையினழகைக் காட்டியன்றோ. வென்கை. அருளாய்-என்னையிப்படி யீடுபடுத்திக்கொண்டது இங்கே வைத்து நலிவதற்காகவோ, அருளிச்செய்யவேணும்,
மூன்றாமடியின் கருத்து; – தேஹமோ ஆத்மாவோ உத்பத்தி விநாசங்களோ எல்லாம் நீயிட்ட வழக்கன்றோ. இப்படி ஸர்வநிர்வாஹகனான நீ அவித்யாதிகளாகிற வஞசனங்களைப் பண்ணி வைக்கின்றாயே! இவையென்ன தெரியாச் செயல்கள்!
English Translation
Fragrant-Tulasi-blossom-Lord! Pray tell me. You rid me of my desires and took me as your own; body, breath, birth and death are you. The many wondrous acts are yours, what deceptions are these?
