(3642)

(3642)

பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,

நீ வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே! அருளாய்,

காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,

மாயங்கள்¦ சய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே.

 

பதவுரை

வாசம் மலர் தண்துழாய் முடி மாயவனே

–

நறுமணம் மிக்க பூவையுடைய செவ்வித்திருத்துழாயை யணிந்த மயிர் முடியையுடைய ஆச்சரியனே!,

நீ

–

இப்படிப்பட்ட நீ,

என்னை பாசங்கள் நீக்கி

–

எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து

உனக்கே அற கொண்டிட்டு

–

உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து

காயமும் சீவனும்

–

பந்தமான சரீரமும் பத்த ஜீவனும்

கழிவு பிறப்பு ஆய்

–

இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க,

பின்னும்

–

பின்னையும்

நீ மாயங்கள் செய்து வைத்தி

–

அவித்யா கர்மவாஸநாருசிகளாகிற வஞ்சனங்களைப பண்ணிவையா நின்றாய்;

இவை என்ன மயக்குக்கள்

–

இவை என்ன வ்யாமோ ஹகங்களாயிருக்கின்றன!

அருளாய்

–

அருளிச்செய்ய வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பதிகத்தின் ப்ரமேயத்திற்குத் தலைமையான பாசுரமிது. என்னை ஆதியிலே விசேஷகடாக்ஷிம் பண்ணிவைத்துப் பின்னையும் எனக்குப் பொருந்தாதபடியான ஸம்ஸாரத்திலே வைத்து நடத்திக்கொண்டு போருகிற இவ்வாச்சரிய மிகுந்த படியை எனக்கருளிச் செய்யவேணுமென்கிறார்.

பாசங்கள் நீக்கி யென்றது –  மயர்வறமதிநலமருளியென்றபடி. உனக்கே அறக்கொண்டிட்டு—துயரறுசுடரடிதொழுதெழு என்னும்படி பண்ணியென்றபடி.

வாசமலர்த் தண்டுழாய்முடிமாயவனே!—புறம்புண்டான பற்றுக்களை யறுத்ததும் தனக்கே யற்றுத் தீரும்படி பண்ணினதும் திருமுடியிலே சாத்தின் திருத்துழாய் மாலையினழகைக் காட்டியன்றோ. வென்கை. அருளாய்-என்னையிப்படி யீடுபடுத்திக்கொண்டது இங்கே வைத்து நலிவதற்காகவோ, அருளிச்செய்யவேணும்,

மூன்றாமடியின் கருத்து; –  தேஹமோ ஆத்மாவோ உத்பத்தி விநாசங்களோ எல்லாம் நீயிட்ட வழக்கன்றோ. இப்படி ஸர்வநிர்வாஹகனான நீ அவித்யாதிகளாகிற வஞசனங்களைப் பண்ணி வைக்கின்றாயே! இவையென்ன தெரியாச் செயல்கள்!

 

English Translation

Fragrant-Tulasi-blossom-Lord! Pray tell me. You rid me of my desires and took me as your own; body, breath, birth and death are you.  The many wondrous acts are yours, what deceptions are these?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top