(3562)
என்னை யாளும் வங்கோ வோரைந் திவைபெய் திராப்பகல் மோது வித்திட்டு,
உன்னை நானணு காவகை செய்து போதி கண்டாய்,
கன்ன லேஅமு தேகார் முகில்வண்ண னேகடல் ஞாலம் காக்கின்ற,
மின்னு நேமியி னாய் வினை யேனுடை வேதியனே!
பதவுரை
|
கன்னலேஅமுதே |
– |
பரமபோக்யனே! |
|
கார் முகில் வண்ணனே |
– |
காளமேக நிறத்தனே! |
|
கடல் ஞாலம் காக்கின்ற |
– |
கடல் சூழந்த வுலகங்களை ரக்ஷித்தருள்கின்ற |
|
மின்னு நேமியினாய் |
– |
உஜ்ஜ்வலமான திருவாழியை யுடையவனே! |
|
வினையேனுடைய வேதியனே |
– |
பாவியேனான என்திறத்தாலே எட்டாத படி வேத வேத்யனாயிருக்குமவனே! |
|
என்னை ஆளும் வன் கோ ஒர் ஐந்து இவை பெய்து |
– |
என்னை அடிமை கொள்ளுகிற கொடிய அரசர்கள் போன்ற இந்த பஞ்சேந்திரியங்களை ஏவி வைத்து |
|
இராப் பகல் |
– |
இரவும் பகலும் |
|
மோது வித்திட்டு |
– |
பிடிக்கச் செய்து |
|
நான்உன்னை அணுகாவகை |
– |
நான் உன்னைக் கிட்டாதபடி |
|
செய்து போதி கணிடாய் |
– |
பண்ணிப்போருகிறாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (என்னையாளும் வன்கோ.) எலியெலும்பனான வென்னை இந்திரியங்களாலே நோவுபடுத்தி அந்த நோவை அறிவிக்க முடியாதபடி கடக்க நிற்கிறாயே! என்கிறார். ஈச்வரன் ஸர்வ சேஷியா யிருப்பவன்; அவனுக்கு ஜீவாத்மா அடிமைப்பட்டிருப்பன்; அவனுக்கு மனஸ்ஸூ விதேயமாயிருக்கும்; மனஸ்ஸூக்கு இந்திரியங்கள் சேஷமாயிருக்கும் என்றிப்படி ஒரு முறையுண்டு; இந்த முறை கெட்டு என்னை இந்திரியங்கள் ஆளும்படியாவதே! என்கிற பரிதாபத்தைக் காட்டுகிறார் “என்னையாளும் வன்கோ ஒரைந்திவை” என்பதனால். இந்திரியங்கள் சேஷமாயிருக்கும் என்றிப்படி ஒரு முறையுண்டு; இந்த முறை கெட்டு என்னை இந்திரியங்கள் ஆளும்படியாவதே! என்கிற பரிதாபத்தைக் காட்டுகிறார். “என்னை இந்திரியங்கள் ஆளும்படியாவதே! என்கிற பரிதாபததைக் காட்டுகிறார் “என்னை யாளும் வன்கோ ஒரைந்திவை” என்பதனால். இந்திரியங்களுக்கு நான் ஆட்பட்டு அவற்றின் வழியே ஒழுக்கவேண்டும் படியான நிலத்திலே என்னை வைத்தாயே! என்று நொந்து சொல்லுகிறபடி.
இப்பாட்டின் முதலடியைத் திருவுள்ளம்பற்றியே மங்கையர்கோன் தமது திருமொழியில் கோவாய் ஐவரென் மெய்குடியேறிக் கூறை சோறிவை தா வென்று குமைத்துப் போகார், நானவரைப் பொறுக்ககிலேன் என்றருளிச் செய்தார்.
இவைபெய்து இராப்பகல் மோதுவித்திட்டு-துர்பார்க்க ப்ரவ்ருத்திக்கு அடியான இந்த இந்திரியங்கள் எனக்கு எதற்காகக் கொடுத்தாய்? இவற்றை என்னிடத்திலே உண்டுபண்ணா திருக்கலாகாதோ? இரவு பகலென்கிற வாசியில்லாமல் இடைவீடின்றி என்னை நலிகைக்காகவேயன்றோ இவற்றை நீ என் பக்கலிலே உண்டாக்கிற்று என்று நெஞ்சுளுத்துச் சொல்லுகிறார்.
ஆழ்வீர்! இவ்விந்திரியங்களினால் உமக்கு என்ன பாதகம்? இதற்காக நீர் நெஞ்சு நோவானேன்? செவி வாய் கண் மூக்கு உடல் என்கிற ஐந்து இந்திரியங்களாலும் நீர் நம்மை அநுபவிக்கலாமன்றோ; செவிகளாலே என் கதைகளைக் கேட்கலாம்; வாயாலே என்னை வாழ்த்தலாம்; கண்களாலே என்னையும் என்னடியார்களையும் காணலாம்; உடலாலே என்னைத் தழுவி முழுசிப் பரிசாதமான திருத்துழாய் யார்களையும் காணலாம்; உடலாலே என்னைத் தழுவி முழுசிப் பரிமாறலாம் இப்படி நல்லுபயோகங்களுக்கு உரியனவான இவற்றைப்பற்றி ஏதுக்கு இப்படி நெஞ்சுடைந்து சொல்லுகிறீர்? என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு உத்தரமருளிச் செய்கிறார்-உன்னை நானணுகாவகை செய்து என்று பிரானே! இந்த இந்திரியங்கள் உன்னுடைய அநுபவத்துக்கே ஏகாந்தமாகில் வெறுப்பனோ நான்! அப்படி ஆகமாட்டாதே; அகற்ற நீ வைத்த மாய வல்லைம்புலன்களாமவை நன்கறிந்தனன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே; விஷயாந்தரங்களிலே பரந்தோடி உன்னருகு வாராமைக்கு இட்ட இடையூறுகளன்றோ இவை என்கிறார்.
ஆழ்வீர்! அப்படியாகாது; ஒருகால் அப்படியானால் அப்போது எம்மிடமறிவித்தால் பிஹரித்துத் தருகிறோம் என்று எம்பெருமான் திருவுள்ளமாம், போதி கண்டாய் என்கிறார்; இவற்றால் படும் எளிவரவை அறிவிக்கவொண்ணாதபடி கண்மறையப் போகிறாயே’ எங்க வந்து எங்ஙனம் அறிவிப்பது என்கை. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “உன்னை அநுபவிக்க வேணுமென்று போந்த பிராட்டியை மாயமானைக் காட்டிப் பிரித்து ஏகாக்ஷி ஏககாணிகள் கையிலே காட்டிக் கொடுத்து உன்னைக் கொண்டகன்றாற்போலே கிடாய் இதுவும்.
கன்னலேயமுதே!—உன்னுடைய பரம போக்யதையை எனக்கு நீ காட்டிக்கொடாமலிருந்தால் இந்திரியங்களின்; வழியே நான் ஓடித்திரிய ருசியுடையேனுவேன்; உன்னுடைய போக்தையையும். கார்முகில் போலும் வடிவழகையும் காட்டிக் கொடுத்தாயாதலால் உன் அனுபவத்திற்கு விரோதியாக இவ்விந்திரியங்கள் என்ன பாடுபடுத்துமோ என்று அஞ்சா நின்றோனென்கை.
கடன் ஞாலம்காக்கின்ற மின்னு நேமியினாய்!- ‘காக்கின்ற’ என்ற விசேஷணம் நேமியிலும் அந்வயிக்கலாம். நேமியானிடத்திலும் அந்வயிக்கலாம். அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர் (திருவிருத்தம்) என்ற பாசுரம் இங்கு நினைக்கத்தகும். கையுந் திருவாழியுமான அழகைக்காட்டி என்னையீடுபடுத்திப் புறம்பு தள்ளலாமோ? என்றவாறு.
வினையேனுடை வேதியனே’- இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்: தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்ய மதிதைவம் என்றும் பொதுநின்ற பொன்னங்கழல் என்றுஞ் சொல்லுகிறபடியே ஊர்ப்பொதுவாயிருக்கிற நீ, என்னளவிலே வந்தவாறே, வேதைக ஸமதிகம்யனானாய்; இன்றிருந்து ஒலைப்புறத்தே கேட்கும்படியான பாபத்தைப் பண்ணுவதே நான்!” என்று. பிரானே! உன்னைப் பிரத்யக்ஷ்மாகக் கண்ணாரக்கண்ணடு அநுபவிக்க வேண்டிய நான் அப்படி யநுபவிக்க ப்ராப்தமாகாமல் ‘சாஸ்த்ரங்களால் கேட்டறியத்தக்கவனத்தனை என்று நிற்கும்படியாவதே, இப்படியும் எனக்கொரு பாலீமோ? என்றவாறு. மேலே உதாஹரித்த ஈட்டு ஸ்ரீஸூக்தியில் “என்னளவிலே” என்றிருப்பதைக்கொண்டு சிலர் மூலபாடத்தை ‘வினையேனிடை’ என்று திருத்துவர்கள்; அது வேண்டர் ‘வினையேனுடை’ எனற பாடத்திலும் வியாக்கியானம் பொருந்தும். வேதியன்-வேதவேத்யன் என்றபடி.
English Translation
You have made five tyrant kings rute me, shooting pain night and day. O Sap of the sugarcane, my dark-hued Lord, protector of the Earth and ocean! O Bearer of the lightning-discus, O this sinner’s Vedic Lord! See, you have made sure that I do not reach your lotus feet!
