(3544)

(3544)

பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்

தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த

மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,

தீயோடுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?

 

பதவுரை

ஓர் அடி

ஒரு திருவடியை

பாய் வைத்து

பரப்பிவைத்து

பாவை நிலம் எல்லாம்

கடல் சூழ்ந்த ஸகல பூமியும்

அதன் கீழ்

அந்தத் திருவடியின்கீழே யாம்படி

தாய்

தாவியளந்து,

ஓர் அடியால

மற்றொரு திருவடியாலே

உலகு எல்லாம

மேலுலக மெல்லாவற்றையும்

தடவந்த

ஆக்ரமித்த

மாயோன்

ஆச்சரியசேஷ்டிதவே!

உன்னை காண்பான்

உன்னைக் காணவேண்டி

வருந்தி

பிரயாஸ்ப்பட்டு

தீயோடு உடன் சேர் மெழுகு ஆய்

நெருப்போடு சேர்ந்த மெழுகின் தன்மையை யுடையேனாய்

உலகில

இவ்வுலகத்தில்

எனை நாளும் திரிவேனோ

எத்தனைநாளும் தட்டித்திரிவதேயோ என்கதி?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-(பாயோரடி வைத்து) ஆழ்வீர்! நீர் அபேக்ஷிக்கிறபடியே உமக்கு நாம் வடிவு காட்டக்கடவோம், அதில் ஒரு குறையில்லை, ஆனால் பேறு உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சி செய்ய வேண்டாவோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, அப்படியா? இப்படியொரு வரம்பு கட்டிக்கொண்டது எத்தனை நாளாகவோ? த்ரிவ்க்ரமாவதாரத்திற்குப்பின்போ? அல்லது அதற்கு முன்பும் இந்த வரம்புண்டோ வென்று கேட்கிறபடியாய் இப்பாசுரம் செல்லுகிறது. அன்றியே, வடிவு காண்கைக்குத் தாம் அயோக்யக்கரென்று உபேக்ஷித்தானாக நினைத்து, யோக்யதாயோக்யதை பாராமல் எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்தவுனக்கு என்னளவில்தானோ யோக்யதை பார்ப்பது என்கிறாராகவுமாம். பாய் என்றது பாவியென்றபடி. பாவுதலாவது  பரப்புதல். ஓரடி பாய் வைத்து – ஓரடியைப் பரப்பி வைத்து என்கை. நீ சேதநர் தலையிலேதிருவடியை வைப்பதற்காக ஸாதநாநுஷ்டானம் பண்ணினார் ஆரேனுமுண்டோ? வஸிஷ்டசண்டாள விபாகம் பாராதே வெறும் உன் க்ருபையாலே செய்தருளினாயத்தனையன்றோ, அது கடல் சூழ்ந்த பூமிப் பரப்படங்களும் தாவியளந்து. ஓரடியால் எல்லாவுலகுந்தட வந்த மாயோன் மற்றைத்திருவடியாலே ப்ரஹ்மலோகத்தளவுஞ் சென்று ஸ்பர்சித்த மாயவனே! முன்னடிகளின் கருத்தை ஆறாயிரப்படியில் பிள்ளான் அருளிச்செய்கிறபடி பாரீர், – “என்னை உன் தருவடிகளிலெ சேர்க்கவேணுமென்று லோக விக்ரமணவ்யாஜத்தாலே, விலையில்லாதொரு ரத்னம் கெடுத்துத் தேடுவாரைப்போலே பெரிய வருத்தத்தோடே உன் திருவடியாலே என்னைத்தேடிக் கொண்டு திரிந்தவுன்னை.“

கொடுத்த கரணகளேபரங்களைக்கொண்டும் எம்பெருமான் கொடுத்த இசைவைக் கொண்டும் அனுஷ்டிக்கின்றார்களாதல்ல அனுஷ்டிப்பர்களும் எம்பெருமானிட்ட வழக்கென்கிறது.

உலகுக்கே ஓருயிருமானாய – ஒரு சரீரத்தை ஒரு ஆத்மா அதிஷ்டித்துக்கொண்டு அபிமானித்திருந்து நோக்குமா போலே, ஒன்றொழியாத ஸகல பதார்த்தங்களுக்கும் எம்பெருமானொருவனே ஆத்மாவாயிருந்து நோக்குபவனென்றபடி. உடலான வென்னை நோகக் வேண்டுவது உயிரானவுனக்குக் கடமையன்றோ வென்று காட்டினபடி.

புறவண்டத்து அலகிற்பொலிந்த திசைபத்தாய் வருவாயோ – அண்டத்துக்கு வெளியே யிருப்பாராய், எண்ணிறந்தவர்களாய், ஞானத்தாலே எங்கும் வியாபித்திருப்பவர்களாய், ரூபித்ரவ்யம்போலே கண்ணுக்கு விஷயமன்றிக்கே அரூபியாயிருக்கிற ஆத்மாக்களுக்கு நிர்வாஹகனானவனே! என்றபடி. முக்தாத்மாக்களுக்கும் கடவனே! என்கை.

அலகிற்பொலிந்த அறிவிலேனுக்கு – அலகில்லாமையாவது எண்ணிக்கையில்லாமை, இதற்கு அறிவில்லாமையிலேல அந்வயம். எண்ணிறந்த அறிவு கேட்டையுடையேன் என்றபடி. “அறிவிலேன்“ என்று மூலத்திலுள்ளதேயன்றி “அறிவில்லாமை“ என்கிற சொல் இல்லையே, ஆகவே அந்வயிப்பது எப்படி? என்று சங்கிக்க நேரும். சொல்வடிவில் இல்லையானாலும், பொருள்வடிவில் உண்டு, அறிவிலேன் என்பதற்கு அறிவில்லாமையையுடையேன் என்று பொருளாகையாலே அதில் ஏகதேசமான அறிவில்லாமையிலே “அலகில்“ என்பது அந்வயிப்தாகக் கொள்க.

 

English Translation

With one step you strode the Earth and Ocean, With one step you spread and took the worlds above.  O Lord, how many days must I yearn to see you?  Alas! I melt like wax in fire and roam the Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top