(3545)

(3545)

உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,

உலகுக்கேகேயோ ருயிரு மானாய்! புறவண்டத்து,

அலகில் பெலிந்த திசைபத் தாய அருவேயோ!

அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே.

 

பதவுரை

உலகில் திரியும் கருமம் கதி ஆய்

லோகத்தில் வியாபரிக்கிற ஸாதன கர்மஸ்வரூபியாயும்

உலகம் ஆய்

அந்தக கருமங்களை யனுஷ்டிப்பவர்கள் ஸ்வரூபியாயும்

உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்

ஸர்வலோகங்களுக்கும் எகாத்மாவாயும் நிற்பவனே!

புறம் அண்டத்து

அண்டங்களுக்கு வெளிப்பட்டிருப்பவர்களாய்

அலகு இல் பொலிந்த

எண்ணிக்கையில்லாதபடி விளங்குபவர்களாய்

திசை பத்து ஆய

பத்துத்திசைகளிலும் ஞானத்தாலே வ்யாப்தாயிருக்கின்ற

முக்தாத்மாக்களை வடிவாகவுடையவனே!

அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு

எண்ணிக்கையில்லாதபடி விளங்குகின்ற அஜ்ஞானத்தையுடையேனான என் விஷயத்தில்

அருளாய்

க்ருபைபண்ணவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உலகில் திரியும்) பிரானே! எல்லாம் உன்னுடைய  ஸங்கல்பாயத்தமாயிருக்க, எனக்கு அருள் செய்வதுதானோ மிகை என்கிறார். உலகில் திரியும் கருமகதியாய் என்றது உலகத்தில் காண்கிற ஸாதநரூப கருமங்களெல்லாம் நீயிட்ட வழக்கு என்றபடி. இதன் கருத்தாவது – எந்த ஸாதனம் அனுஷ்டித்தாலும் பலன் தருவது நீயேயன்றோ, அசேதநமான அவை பலனலிக்கமாட்டாவே. பலனளிப்பவன் நீயேயான பின்பு அருள்செய்யத தட்டென? என்பதாம். •••• ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம். இந்த ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியின் கருத்தாவது – ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியாய் மஹோதாரனான அப்பெருமானே இஹலோக பரலோக போகங்களை யளித்தருள வல்லவன், அசேதநமாய் ஒரு நொடிப் பொழுதில் அழிந்துபோகக் கூடியதான கரும்மானது என்னைற்கோ விளைக்கூடிய பலனுக்கு ஸாதனமாக மாட்டாதன்றோ என்கை.

உலகமாய் என்றது அக்கருமங்களை அனுஷ்டிப்பவர்களும் நீயிட்ட வழக்கென்றபடி. அதாவது – சிலர் சில கருமங்களை யனுஷ்டிக்கிறார்களென்று நாம் காணாநின்றாலும் எம்பெருமான் உருக்காட்டாதே யொளிப்பாயோ? குணானுபவத்தாலேயே தரிப்பார் சிலருண்டு, அவர்கள், கோஷ்டியிலே நான் சேர்ந்தவனல்லேன், வடிவு காணப்பெற வேணுமென்கிற ஆசையுடையேனாதலால் என்னை வஞ்சிக்கலாமோ வென்கிறார்.

 

English Translation

You are the karmic souls roaming the Earth, You are the soul of the world itself.  You are the formless ten spheres and the spirit beyond,  Pray grace this tiny self of infinite ignorance.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top