(3540)

(3540)

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,

மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,

நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,

நண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே.

 

பதவுரை

மண்ணும் விண்ணும் மகிழ

உபய விபூதியும் (அழகு கண்டு) உகக்கும்படி

குறள் ஆய்

வாமனமூர்த்தியாய் (மாவலியிடம் சென்று)

வலம் பாட்டி

தன்னுடைய சக்தியக்காட்டி

மண்ணும் விண்ணும் கொண்ட

மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட

மாயம் அம்மானே

அற்புதனான ஸ்வாமியே!

உனை நான் நண்ணி

உன்னை நான் கிட்டி

கண்டு உகந்து கூத்துஆட

கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பரவசனாய் நர்த்தனம் பண்ணும்படியாக

நண்ணி

இங்கே வந்து கிட்டி

ஒரு நாள்

ஒருநாளாகிலும்

ஞாலத்தூடே நடவாய்

இந்நிலத்திலே நடையழகு காட்டியருளாய்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மண்ணும் விண்ணும்) கீழ்ப்பாட்டில் “கொடியேன்பால் ஒருநாள் வாராய்“ என்றழைத்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர்! நீர் அழைக்குமிடத்தே நாம் வந்துவிட முடியுமோ! நாமிருக்குமிடத்தே உம்மையழைத்துக் காட்டுவதாகவன்றோ நாம் கருதியிருப்பது, அது ஒரு காலவிசேஷத்திலே யாகும், இப்போது நம்மை நிர் நிர்ப்பந்தித்து ப்ரக்ருதி மண்டலத்திலே நம்மைக் காண நினைப்பது பயன்பெறாது காணும்“ என்று திருவுள்மாக, அதற்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார். “பிரானே! இப்படியும் திருவுள்ளம் பற்றலாகுமோ? ஆஸுரப்க்ருதியான மாவலிபோல்வார்க்கு, அவ்வடிவு தன்னையே இங்கே பற்றலாகுமோ? ஆஸுரப்ரக்ருதியான மாவலிபோல்வார்க்கு, அவ்வடிவு த்ன்னையே இங்கே கொண்டு வந்து இதர ஸஜாதீமாக்கிக் காட்டிற்றிலையோ? என்னளவில்தானே வஞ்சனை செய்வது? எனகிறார்.

முதலடியினால் வாமனாவதாரத்தையும், இரண்டாமடியினால் த்ரிவிக்ரமாவதாரத்தையும் அநுபவித்துப் பேசுகிறார். ****************** *************** ************ **************************** கௌபீநம் கடிஸூத்ரஸீம்நி கடயந் மௌஞ்ஜீமபிவ்யஞ்ஜயந் க்ருத்திம் க்ருஷ்ணம்ருகஸ்ய வக்ஷ்ஸி வஹந் ஆஷாடமம்ஸேர்ப்பயந், ஸ்வாத்யாயஸ்வரஸம்பதா பரிஷதாம் ப்ரீதிம் ஸமுத்பாதயந் யாச்ஞாயை பலியஜ்ஞவாடநிகடம் ப்ராப்தொ வடு. பாது வ * என்னும்படியான வழகுபொலிய “என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண் மன்னா! தருக“ என்று சொல்லிக்கொண்டு வாமனமூர்த்தி மாவலி வேள்விக்கண் எழுந்தருளின காலத்து மாவலியன் மனைவி கண்டு வியந்து உவந்து “இவ்வழகிய பிள்ளை எது கேட்டாலும் கொடுங்கள்“ என்று கணவனுக்குக் கூறினாளாம், அதனைப் பெரியாழ்வார் “மன்னனறன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த“ எகிற பாசுரத்தினாலருளிச் செய்தார். ஆஸுரப்ரக்ருதியான அவள் மகிழ்ந்த்து மண்ணும் விண்ணும் மகிழ்ந்த தொக்குமென்று கருதி இவர் “மண்ணும் விண்ணும் மகிழ்“ என்கிறார். வாமன் மூர்த்தியாயெழுந்தருளிக் காரியஞ் செய்யாதொழியில் மண்ணுளாரும் விண்ணுளாரும் அழிந்தனராக நேருமாதலால் அப்படி நேராமற் செய்தபடியாலே மகிழ என்றதாகவும்.

வலம்காட்டி – இங்கே ஈடு – “ஔதார்யமென்றொரு குணலேசம் கிடக்கையாலே ராவணாதிகளைப்போலே அம்பாலே அழிக்கப்போகாதே, அழகாகிற பலத்தைக்காட்டி வாய்மாளப்பண்ணினபடி. சுக்ராதிகளுடைய நிரோதம் உண்டாயிருக்கச் செய்தேயிற அழகுக்குத் தோற்றுக் கொடுத்துக் கொண்டு நின்றபடி.“

மண்ணும் விண்ணுங்கொண்ட மாயவம்மானே! – உலகங்களையளக்கிற காலத்திலுண்டான மாயங்களை நினைக்கிறது. * மிக்க பெரும்புகழ் மாவலிவேள்வியில் தக்கதிதன்றென்று தானம் விலக்கய சுக்கிரன் கண்ணைத் துருமபால் கிளறியதும், * என்னிது மாயம் என்னப்பனறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டனவாயென்ற மன்னு நமுகியை வானிற்சுழற்றியதும் முதலான மாயங்கள்.

நண்ணியுனை நான் கண்டு உகந்து கூத்தாட – அக்காலத்தில் மாவலி இழவோடே ஒழிந்து போனான், இந்திரன் முதலானார் நம்பேறு பெற்றோமென்று களித்துப்போனார்கள், அப்போ தையவன் வடிவழகைகண்டு உகந்து கூத்தாடப் பெற்றார் ஒருவருமில்லாமையாலே அந்தக் குறைதீர, நண்ணியொருநாள் ஞாலத்தூடே நடவாய் – நானிருந்தவிடத்தே நீ வந்து கிட்டி உன் நடையழகுகண்டு அதிலே யீடுபடவல்ல என்முன்னே ஒருநாள் நடந்தாலாகாதோ?

 

English Translation

O wonder-Lord who took the Earth and sky! You came as Vamana, and showed your power on Earth, Pray walk this Earth again one day, Come, let me touch and see you, and dance in joy.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top