(3502)
திருந்து வேதமும் வேள்வி யும்திரு மாம களிரும் தாம்,மலிந்,
திருந்து வாழ்பொரு நல்வ டகரை வண்தொ லைவில்லி மங்கலம்,
கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,
இருந்தி ருந்துதரவிந்த லோசன! என்றேன் றேநைந்தி ரங்குமே.
பதவுரை
| அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
| திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும்தாம் |
– |
பரிசுத்தமான வேதங்களும் வேதோக்த கருமங்களும் ஸம்பத் ஸம்ருத்யுமாகிறவிவை |
| மலிந்து இருந்து வாழ் |
– |
நிரம்பியிருந்து விளங்கப்பெற்றதாய் |
| பொருநல் வடகரை |
– |
தாமிரப்பரணியின் வடகரயிலுள்ளதாய் |
| வண் |
– |
தர்சநீயமான |
| தொலைவில்லிமங்கலம் |
– |
தொலைவில்லித் திருப்பதியை |
| கரு தட கண்ணி |
– |
கறுத்துப்பெருத்த கண்களைடையளான இப்பெண்பிள்ளை |
| கை தொழுத அ நாள் தொடங்கி இ நாள் தோறும் |
– |
அஞ்ஜலிபண்ணினவன்று தொடங்கி இன்று வரையிலும் |
| இருந்து இருந்து |
– |
இடையிடையே ஏங்கியேங்கியிருந்து |
| அரவிந்த லோசன என்று என்றே |
– |
தாமரைக் கண்ணனை பலகாலு மழைத்து |
| நைந்து இரங்கும் |
– |
பலபடியாலும் சிதிலையாக நின்றாள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (திருந்து வேதமும்) துலைவில்லித் திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற அந்நாள் தொடங்கி இப்பெண்பிள்ளை அத்தலத்து எம்பெருமானது கண்ணழகிலேயே யீடுபட்டுத் தளராநின்றாளென்கிறது. வேதபாராயணங்களும் யஜஞயாகங்களும் ஸம்ருத்தமாய் ஸ்ரீதேவி பூதேவிகளோடே எழுந்தருளியிருக்கப்பெற்ற திருப்பதியென்று தலத்தின் மகிமை கூறுவன முன்னடிகள்.
திருந்து வேதம் – ஸ்வரவர்ணக்ரமங்கள் ஒன்றும் பிறழாமே எப்போதும் எவ்விடத்தும் ஒழுங்குபட விளங்கப்பெற்ற வேதம் என்றபடி. வேள்வி – அந்த வேதங்களில் ஓதப்பட்ட பகவதாராதந க்ரியா கலாபங்கள். திருந்து வேதமும் வேள்வியும் மலிந்து வாழ், திருமாமகளிரும் தாமும் இருந்துவாழ் என்று யோஜித்துக்கொள்ளலாம்.
கருந்தடங்கண்ணி – வெளிக்கண்ணின் அழகுசொன்னவிது ஸ்வாபதேசத்தில் உட்கண்ணின் அழகு சொன்னபடி. கரியகோலப்பிரானை விஷயீகரிக்கின்ற விசாலமான ஞானக்கண் படைத்தவர் ஆழ்வார் என்றபடி. இருந்திருந்து அரவிந்தலோசன வென்றென்றே – இங்கே ஈடு – “ஒருகால் அரவிந்தலோசன! என்னும்போது நடுவே பதின்கால் பட்டைப்பொதிசோறு அவிழ்க்கவேணும்“ என்று. அதாவது – திருநாமத்தைச் சொல்லவேணுமென்று தொடங்கும் போதே நைந்து உள்கரைந்து உருகுகிறபடியாலே நெடுகச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்கின்றமை சொன்னவாறு.
English Translation
The Lord lives in plenty on the Northern banks on Porunal, in prosperous Tulaivilli-Mangalam, amid Vedic chanters and Lakshmi-like ladies. Since the day this dark-eyed fawn worshipped him there, everyday she says “Aravindalochana” patiently, then falls and weeps.
