(3502)

(3502)

திருந்து வேதமும் வேள்வி யும்திரு மாம களிரும் தாம்,மலிந்,

திருந்து வாழ்பொரு நல்வ டகரை வண்தொ லைவில்லி மங்கலம்,

கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,

இருந்தி ருந்துதரவிந்த லோசன! என்றேன் றேநைந்தி ரங்குமே.

பதவுரை

அன்னைமீர்

–

தாய்மார்களே!
திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும்தாம்

–

பரிசுத்தமான வேதங்களும் வேதோக்த கருமங்களும் ஸம்பத் ஸம்ருத்யுமாகிறவிவை
மலிந்து இருந்து வாழ்

–

நிரம்பியிருந்து விளங்கப்பெற்றதாய்
பொருநல் வடகரை

–

தாமிரப்பரணியின் வடகரயிலுள்ளதாய்
வண்

–

தர்சநீயமான
தொலைவில்லிமங்கலம்

–

தொலைவில்லித் திருப்பதியை
கரு தட கண்ணி

–

கறுத்துப்பெருத்த கண்களைடையளான இப்பெண்பிள்ளை
கை தொழுத அ நாள் தொடங்கி இ நாள் தோறும்

–

அஞ்ஜலிபண்ணினவன்று தொடங்கி இன்று வரையிலும்
இருந்து இருந்து

–

இடையிடையே ஏங்கியேங்கியிருந்து
அரவிந்த லோசன என்று என்றே

–

தாமரைக் கண்ணனை பலகாலு மழைத்து
நைந்து இரங்கும்

–

பலபடியாலும் சிதிலையாக நின்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (திருந்து வேதமும்) துலைவில்லித் திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற அந்நாள் தொடங்கி இப்பெண்பிள்ளை அத்தலத்து எம்பெருமானது கண்ணழகிலேயே யீடுபட்டுத் தளராநின்றாளென்கிறது. வேதபாராயணங்களும் யஜஞயாகங்களும் ஸம்ருத்தமாய் ஸ்ரீதேவி பூதேவிகளோடே எழுந்தருளியிருக்கப்பெற்ற திருப்பதியென்று தலத்தின் மகிமை கூறுவன முன்னடிகள்.

திருந்து வேதம் – ஸ்வரவர்ணக்ரமங்கள் ஒன்றும் பிறழாமே எப்போதும் எவ்விடத்தும் ஒழுங்குபட விளங்கப்பெற்ற வேதம் என்றபடி. வேள்வி – அந்த வேதங்களில் ஓதப்பட்ட பகவதாராதந க்ரியா கலாபங்கள். திருந்து வேதமும் வேள்வியும் மலிந்து வாழ், திருமாமகளிரும் தாமும் இருந்துவாழ் என்று யோஜித்துக்கொள்ளலாம்.

கருந்தடங்கண்ணி – வெளிக்கண்ணின் அழகுசொன்னவிது ஸ்வாபதேசத்தில் உட்கண்ணின் அழகு சொன்னபடி. கரியகோலப்பிரானை விஷயீகரிக்கின்ற விசாலமான ஞானக்கண் படைத்தவர் ஆழ்வார் என்றபடி. இருந்திருந்து அரவிந்தலோசன வென்றென்றே – இங்கே ஈடு – “ஒருகால் அரவிந்தலோசன! என்னும்போது நடுவே பதின்கால் பட்டைப்பொதிசோறு அவிழ்க்கவேணும்“ என்று. அதாவது – திருநாமத்தைச் சொல்லவேணுமென்று தொடங்கும் போதே நைந்து உள்கரைந்து உருகுகிறபடியாலே நெடுகச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்கின்றமை சொன்னவாறு.

English Translation

The Lord lives in plenty on the Northern banks on Porunal, in prosperous Tulaivilli-Mangalam, amid Vedic chanters and Lakshmi-like ladies.  Since the day this dark-eyed fawn worshipped him there, everyday she says “Aravindalochana” patiently, then falls and weeps.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top