(3480)

(3480)

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,

தன்சரண் நிழற்கீ ழுலகம்வைத்தும் வையாதும்,

தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

என்சரணென் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே..

பதவுரை

சுரர்க்கு வன் சரண் ஆய்

தேவர்களுக்குச் சிறந்த புகலிடமாய்
அசுரர்க்கு வெம்கூற்றமும் ஆய்

அஸுரர்களுக்கு வலிய மிருத்யுவாய்
உலகம் தன் சரண் நிழல் கீழ் வைத்தும்வையாதும்

உலகத்தைத் தன் திருவடிச் சரயையிலே ஒதுக்கியும் ஒதுக்காமலும் (இருந்துகொண்டு)
தென் திசைக்கு சரண் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்

தென்திசைக்குள்ளே புகலிடமான திருவண்ணகரிலே தங்கியுள்ள பெருமான்
என்சரண்

எனக்கு சரண்யன்
என் கண்ணன்

எனக்கு விதேயன்
என்னை ஆளுடை என் அப்பன்

என்னை அடிமைகொண்ட மஹோபகாரகன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வன்சரண்) தேவர்களுக்கு எந்த ஆபத்துவந்தாலும் ஓடிவந்து திருவடிகளிலே விழ * முப்பத்துமூவரமரர்க்கு முன் சென்று கப்பந்தவிர்க்கும் கலியெ * என்கிறபடியே அவர்களுக்காகத் தன்னை அம்புக்கிலக்காக்கி அவர்களைக் காப்பாற்றும் வலிய ரக்ஷ்கன், இப்படிப்பட்டவன் அஸுரராக்ஷஸ கோஷ்டியில் வந்தாலோ அவர்களுக்குக் கொடிய யம்னாயிருப்பன். ப்ரஸித்தனாயிருக்கிற எம்பெருமான் தேவர்களுக்கு வன் சரணாயும்  அசுரர்களுக்கு வெங்கூற்றமாயும் இருந்தால் அவனுக்கு இது குறையாகாதோ? என்னில், ஆகாது. தேவர்களுக்கு நன்மை செய்யவேணும், அசுரர்களுக்குத் தீமைசெய்யவேணும் என்று எம்பெருமானுக்கு இங்ஙனே ஒரு ஆக்ரஹமில்லை, ஒருங்கே எல்லார்க்கும் நன்மை செய்யவேணுமென்பதே அவனுடைய திருவுள்ளம். எல்லாரும் உபயோகங்கொள்ளக் கல்லின ஏரியிலே கழுத்தலே கல்லைக்கட்டிக் கொண்டு விழுந்து சாவார் போலவும், விளக்கிலே விட்டில்கள் தாமேவந்து விழுந்து மடிந்து போமாபோலவும் எம்பெருமானிடத்திலும் அவரவர்களே வந்து விழுந்து மடிந்தால் இது இவனது குற்றமாகுமோ?

தன்சரண்நிழற்கீழ் உலகம் வைத்தும்வையாதும் – * காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லை உன்பரதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம் நானெங்குங் காண்கின்றிலேன் * (பெரியாழ்வார் திருமொழி) என்று தன் திருவடிகளிலே வந்து சேர்வார்க்கு ஸகலதாபங்களும் தீரும்படி நிழல்கொடுத்தும், அக்நிஜ்வாலையை விழுங்கி விடாய் கெடநினைக்குமாபோலவும் ஆடுகிற பாம்பின் நிழலிலே யொதுங்கி ஸுகிக்க நினைக்குமாபோலவும் விஷயாந்தரங்களின் சாயையிலே யொதுங்கி மகிழ நினைப்பார்க்குத் தாபத்தை வளர்த்தும் இப்படிப்பட்ட தன்மையை யுடையவன் தென் திசைக்குத் திலதமான திருவிண்ணகரிலே திகழாநின்றான், அவனே யெனக்கு ஸர்வர்த்மநா புகல் என்றாராயிற்று.

English Translation

The permanent refuge of the gods, the ghastly death of Asuras, protecting all the worlds below his feet and yet not thus, -the Lord of Tiru-vinnagar, refuge of the Southern Quarters, is my refuge.  O My Father, My Lord, My Krishna, My Master!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top