(3479)

(3479)

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய்,

கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும்,விண்ணோர்

சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

வரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே.

பதவுரை

பரம் சுடர் உடம்பு ஆய்

அப்ராக்ருத விக்ரஹயுக்தனாயும்
அழுக்கு பதித்த உடம்பு ஆய்

ஹேய ஜகத்ரூப சரீரயுக்தனாயும்
கரந்தும் தோன்றியும் நின்றும்

மறைந்தும் வெளிப்பட்டு மிருந்தும்
கைதவங்கள் செய்தும்

வஞ்சனைகளைச் செய்தும் (இப்படிப்பட்ட தன்மைகள் திகழ)
விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்

தேவர்கள் தலைவணங்கித் தொழுமிடமான திருவிண்ணகரிலே உறையும் பெருமாடைய
வரம் கொள் பாதம் அல்லால்

சிறப்புப் பொருந்திய திருவடிகள் தவிர
யாவர்க்கும் வன் சரண் இல்லை

யார்க்கும் வலிதான புகலிடம் வேறில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பரஞ்சுடர்) எம்பெருமானுக்கு இரண்டு வகையான சரீரங்களுண்டு அப்ராக்ருதமாய் சுத்தஸத்வமயமான அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹம் ஒன்று, – ஜகத் ஸர்வம் சரீரம் தே. என்கிறபடியே ஸகல ஜகத்தும் அவனுக்கு சரீரமாகையாலேஇந்த ஸமஸ்த ஹேயாஸ்பத சரீரம் மற்றொன்று.

கரந்தும் தோன்றியும் – * இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும் * என்றும், * கண்காணநிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றதபடி நின்று * என்றும் (பிள்ளைலோகாசாரயர்) அருளிச்செய்கிறபடியே மறைந்திருப்பதும், * காணவாராயென்றென்ற்று கண்ணும்வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி ராமக்ருஷ்ணாதி அவதாரங்களைச் செய்வதும் விவக்ஷிதம். நின்றும் –நூறாண்டு பதினோராயிரமாண்டு நின்றும். கைதவம் – வடசொல், க்ருத்ரிமம்  என்றபடி. “அவதரித்து நிற்கச் செய்தே தன்படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும் ஆச்ரிதர்க்குத் தோற்றும்படி பண்ணியும்“ என்பது ஈடு.

இப்படிப்பட்டவன், பிரமன் தேவர்கள் தலைபடைத்த ப்ரயோஜனம் பெற்றோம் என்று வணங்கும்படி திருவிண்ணகரிலே உறைகின்றான், அவனுடைய திருவடிகளல்லது புகலில்லை.

வரங்கொள் பாதம் – அவரவர்கள் தம்தமக்கு வேண்டிய வரங்களை இரந்து பெற்றுக்கொள்ளும்படியான திருவடிகள். வரம் என்கிற வடசொல் ச்ரேஷ்டம் என்கிற பொருளையுமுடைத்தாதலால் “ச்ரேஷ்டத்தன்மையைக் கொண்டிருக்கிற“ என்னவுமாம். யாவர்க்கும் என்றவிடத்து “எத்தனையேனும் கிழாய்கிழாயர்க்கும்“ என்பது ஈடு, கிழம்கிழமாயுள்ளவர்களுக்கும் – பெருப்பெருத்தவர்களுக்கும் என்றபடி.

வன்சரணே – “பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள்விடாது திண்கழலாயிருக்கும்“ என்ற முமுக்ஷுப்படி ஸ்ரீஸூக்தி அநுஸந்தேயம்.

English Translation

A body of exceeding radiance, a body full of filth, hiding now and coming then, faithful and deceiving, -he resides in Vinnagar worshipped by the gods.  Other than his lotus feet, we have no refuge.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top