(3463)

(3463)

போகுநம் பீ! உன்தாமரை புரைகண் ணிணையும் செவ்வாய் முறுவலும்,

ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,

தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவியோசை வைத்தெழ,

ஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே.

பதவுரை

நம் போகும

பிரானே! அப்பால்போ
உன்

உன்னுடைய
தாமரை புரை கண் இணையும்

தாமரைபோன்ற கண்களிரண்டும்
செம் வாய் முறுவலும்

சிவந்த அதர்தில் நின்றும் தோன்றுகிற சிரிப்பும்
ஆகுலங்கள் செய்ய

வீணாக எங்களை ஆகுலப்போவதற்கே
அழிதற்கே

அதனால் சிதிலப்பட்டுப் போவதற்கே
நோற்றோமே

இட்டுப் பிறந்தவர்களன்றோ நாங்கள்
நின் அருள் சூடுவார்

உனது அருளை அநுபவிக்கப் பிறந்த
தோகை மா மாயிலார்கள்

தோகைவிரித்த நல்ல மயில்போன்ற கூந்தலையுடைய மாதர்கள்
ஓசை செவி வைத்து எழ

(வேணுகானத்தின்) ஓசையைக்கேட்டு எழுந்து வரும்படியாக
ஆகள் போக விட்டு

பசுக்களை மேய்க்கப் போகவிட்டு
போய் இருந்து

அங்கேறப் போயிருந்து
குழல் ஊது

புல்லாங்குழலை ஊதிக் கொண்டுகிட.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (போகுநம்பீ) கீழ்ப்பாட்டில் ‘போகுநம்பீ என்று சொல்லியிருக்க, மறுபடியும் ‘போகுநம்பி‘ என்கிறவிதற்கு ஒரு ப்ரஸக்திவேணுமே. போகு என்னச்செய்தேயும் அவன் போகாதே சில பிணக்குச்செய்து அணுகிவந்தான், நங்காய்! என்னுடைய பந்தும் கழலும் என்றாயே, நீயோ ஸ்த்ரீயாயிராநின்றாய், உனக்கு ஸ்வாதந்திரியமில்லை, உனக்கென்று தனியே ஒரு பொருளில்லை, இந்தப் பந்தையும் கழலையும் நீ ஏதேனும் காசுகொடுத்து வாங்கிற்றுண்டோ? என்னுடையவைகளை உன்னுடையவைகளாக நீ சொல்லுவது வழக்கோ? என்று சில பேசிக்கொண்டு புன்முறுவல் செய்துகொண்டு அணுகிவந்தானாக, இங்ஙனே  கண்ணழகையும் முறுவலழகைலது உன்னை யநுபவிக்கப் பிறந்தோமல்லோங்காண் என்றபடி.

இப்படி பராங்குசநாயகி சொன்னவாறே அவன் மேன்மேலும் சில விலாஸ சேஷ்டிதங்களைச் செய்யப்புக, இவற்றுக்கு நாம் முகங்கொடுப்போமல்லோம் என்று முகத்தை மாறவைத்தாள், அப்போது பின்புறத்து அளகபாரங்களைக் கண்டு கண்ணபிரான் “மயில்தோகைபோலே புல்லாங்குழலோசையாலே இவளை வசப்படுத்க் கொள்வோமென்று பார்த்து வேணுகானம் பண்ணத்தொடங்கினான், அதன்மேல் பின்னடிகள் கூறுகின்றாள், அப்பா! நானன்று கூந்தலழகி, உன் திருவருளுக்குப் பாத்ரபூதைகளான கூந்தழகிகள் திருவாய்ப்பாட்டியிலே பலருண்டுகாண், அங்கே சென்று பசுக்களை மேயவிட்டுக் கொண்டு இந்த வேணுகானத்தை அங்கே செய்வாயாகில் அவர்கள் திருவுள்ள முகப்பர்கள், அங்கே சென்று ஊதுகிடாய் என்றாளாயிற்று.

English Translation

Go Sire! Your lotus eyes and coral smile hurt and make us faint. Alas! this is the fruit of our penance! Lovely young damsels, strutting like peacocks will worship your grace.  Go send your crows that-a-ways, and play your flute by them.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top