(3414)

(3414)

அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம் அவை நன்கறிந்தனன்,

அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,

பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்

புகற்கரிய எந்தாய்!புள்ளின்வாய் பிளந்தானே!

 

பதவுரை

பகர் கதிர்

விளங்காநின்ற ஒளியையுடைத்தான்

மணிமாடம் நீடு

மணிமாடங்கள் ஓங்கியிருக்கப்பெற்ற

திரீவரமங்கை

வானமாமலையிவ்பதியிலே

வாழ்நனே

வாழுமவனே!

என்றும்

ஒருநாளும்

புகற்கு அரிய வந்தாய்

(உதவாதவர்களுக்கு) ப்ராபிக்கவொண்ணாத ஸ்வாமியே!

புள்ளின் வாய் பிளந்தானே

பநாசுரனது வாயை இரு துண்டாக்கி அவனை முடித்தவனே

அதகற்ற நீ வைத்த

ஒதுக்குகைக்காக நீ உண்டாக்கி வைத்த

மாயம்

ஆச்சரியமான செய்கைகளையுடைய

வல்

பலிஷ்டங்களான

ஐம்புலன்கள் ஆம்அவை

பஞ்சேந்திரியங்களை

நன்கு அறிந்தனன்

உள்ளபடியே அறியப்பெற்றேன்;

நீ

பரம காருணிகனான நீ

என்னையும் அகற்றி

அடியேனையும் உன் பக்கலில் நின்றும் அகலச்செய்து

அரு சேற்றில்

கால்வாங்கிக் கரையேற முடியாத விஷயங்களாகிற சேற்றிலே

வீழ்த்தி கண்டாய்

தள்ளிவைக்கின்றாயே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அகற்ற நீவைத்த) கீழ்ப்பாட்டில் * அடியேனைகற்றேலே என்று ஆழ்வார் பிரார்த்திக்கக்கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்!’ உம்மை அகற்றுவதற்கு என்ன ப்ரளக்தியுண்டாயிற்று? ‘அப்ரஸந்தமாக ஏதுக்கு இரக்கிறீர்?’ என்றருளிச்செய்ய, பிரானே! அடிமைக்க விரோதியான ஸம்ஸாரத்திலே என்னை வைத்திருப்பது

அகற்றினபடியன்றோ; அப்ரஸக்தமாயோ என் பேச்சிருப்பது? என்கிறார்.

அர்த்த பஞ்சக ஜ்ஞானத்திலே விரோதி ஜ்ஞானமும் ஒன்றாயிருக்கும்; அஃது உண்டானபடி இப்பாட்டின் முன்னடிகளிலே சொல்லிற்றாகிறது. கீதையிலே “***- மம மாயா துரத்யயா.” என்று, நான் நினைத்தபிணை ஒருவரால் அவிழ்த்துக்கொள்ளப் போகாது என்று சொல்லிவைத்தபடியே நீ பிணைத்த பிணைக்குத் தப்பிப் பிழைத்தாருண்டோ? ஐந்து இந்திரியங்களையும் அவற்றுக்கு உணவான ஐந்து விஷயங்களையும்  பிணைத்துவைத்து இவற்றின் நடுவே என்னை இருந்தினாயே! இது அகற்றுவதற்கு இட்டவழியோ? அன்றி அணுகுவதற்கு இட்டவழியோ? உன்னை உகவாதார் அகன்றுபோம்படிக் கீடாக நீ வைத்தவை இவை என்று நான் நன்றாக அறிந்துகொண்டேன். *மயர்வறமதிநலம் பெறுகையாலே நான் அழகிதாக அறிந்தேன்.

ஆழ்வார் இங்ஙனே சொல்லக்கேட்ட  எம்பெருமான் ‘ஆழ்வீர்! உகவாதார் அகன்றுபோகைக்கு வைத்தோமென்று  அறிந்திருக்கின்ற நீர் நம்மைப் பொடிய ப்ரஸக்தியுண்டோ?’ என்ன; (அகற்றி என்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்) என்கிறார். நான் மாத்திரம் இந்த பாத்திரத்திலிருந்து தப்பிப் பிழைக்கும்படியாயோ நீ வைத்திருப்பது? உன்னாலல்லது சொல்லாதபடியாயிருக்கிற என்னையும் உன் பக்கல் நின்றும் நீ பிரித்து, கால்வாங்கவொண்ணாதபடியான சப்தாதி விஷயங்களிலே தள்ளிவைத்திருக்கின்றாயே! என்கிறார்.

மூன்றாமடியில் “பகர்க்கதிர்” என்றும் பாடபேதமுள்ளதாக வியாக்கியானங்களில் காட்டப்படுகிறது. இடையின ரகரமான பாடத்தில், பகர் என்றும், கதிர் என்றும் ஒளியாய், மிக்க வொளியையுடைய என்றபடி. வல்லின றகரமான படத்தில் பகல் என்று ஸூரியனுக்குப் பேராகையாலே ஸூர்யமண்டலத்தளவுஞ் செல்லவுயர்ந்து ஒளியையுடைய மணிமாடங்கள் என்றபடி.

வாணன் – வாழ்நாள்; மரூஉமொழி.

 

English Translation

These wicked illusion-casting senses that you gave will forsake me one day, I know them well.  Even you have forsaken me and dumped me into a quagmire, just see! O Resident of Sivaramangala-nagar where fall mansions shine, Lord who ripped the bird’s break, you are hard to reach.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top