(3377)
பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று,
ஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம்
மண்ணளந்த கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்,
எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே?
பதவுரை
|
பெண் பிறந்தார் எய்தும் |
– |
பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அடைகின்ற |
|
பெரு துயர் காண்கிலேன் என்று |
– |
பெருந்துக்கத்தை காணமாட்டேன்’ என்றெண்ணி |
|
ஒண் சுடரோன் |
– |
ஸூரியன் |
|
வாராது ஒளித்தான் |
– |
வாராதே மறைந்து போனான் போலும் |
|
இ மண் அளந்த |
– |
இப்பூமியை யளந்து கொண்டவனும் |
|
பெரிய கண் |
– |
பரந்த திருக்கண்களையுடையவனும் |
|
செம்வாய் |
– |
சிவந்த அதரத்தையுடையவனும் |
|
எம் கார் எறு |
– |
கறுத்த திருமேனியையுடையவனும் காளைபோன்றவனுமான எம்பெருமான் |
|
வாரான் |
– |
வந்து முகங்காட்டுகின்றிலன்; |
|
ஆல் |
– |
அந்தோ! |
|
எண்பெரிய |
– |
நினைக்கவும் முடியாத |
|
சிந்தை நோய் |
– |
மனோவியாதியை |
|
என்னை |
– |
என்னிடத்தில் நின்றும் |
|
தீட்பார் |
– |
நீக்கவல்லவர்கள் |
|
ஆர் |
– |
யார் சொல்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பெண் பிறந்தாரென்னும்) சண்டார்க்குப் பொறுக்க வொண்ணாதபடி நான் துன்பப்பட்டாநிற்க, எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரிவிக்கிரமன் வருகின்றிலன்; என்னுடைய சிந்தை நோய் தீரும்வழி என்னோ! என்கிறான்.
இரவு முப்பது நாழிகை கழிந்தவாறே ஸூரியன் உதிப்பதென்று ஒரு நியதியுண்டு; *** என்று உபநிஷத்தும் ஓதிவைத்தது; அப்படியிருக்க அந்த ஸூர்யன் உதிக்கவேயில்லை; ‘பெண்ணாய்ப் பிறந்தவர்கள் படும் துன்பத்தைக் காண்பதிற் காட்டிலும் நாம் முடிந்துபோவதே நன்று’ என்று துணிந்து அவன் முடிந்து போயினன் போலும் என்கிறாள். இரவு மிகவும் செல்லுகின்றமையை இங்ஙனம் கூறினாளாயிற்று.
ஒண்சுடரோன் வாராதொளித்தான் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி:- “தன் தோற்றரவிலே ஸகலலோகமும் போம்படியான ப்ரகாசத்தையுடையவனும் வாராதே மறைந்தான். ** என்னாரே ஒளிந்தானென்கிறது- *இத்யாதிப்படியே பகவதாஸ்ஸஞயாலே முப்பது வட்டம் வர வேணுமே; இங்ஙனே யிருக்கிறான் *** மறுத்தால் வேணுமாகில் தலையையறுத்து வைக்குமித்தனையன்றோ இக் கொடுமை என் கண்ணால் காணப்பாகா’ என்று *** தேடி வந்தாலும் காணாதபடியொளித்தான்.”
ஸூர்யன் வந்தாலென்ன, ஒளிந்தாலென்ன? அவனைக் கொண்டு நமக்கொரு காரியமில்லையே. வடிவழகு முதலியவற்றால் என்னைத் தோற்பித்து எனக்குப் பரமயோக்யனாயிருந்தவன் எழுந்தருளிக்காட்சி தரவில்லையே; என் சிந்தை நோயைத் தீர்க்கவல்லனான அவன் வர திருக்கிறபடியாலே இனி என் சிந்தை நோய் அநுபவித்தே கழிக்குமித்தனைபோலும் என்றாளாயிற்று.
English Translation
Even the radiant Sun has hidden himself, unable to bear the sight of a maiden in distress. My black bull, the Lord with large eyes and red lips does not come. Alas, who can cure my love-sickness?
