(3338)

(3338)

விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும் தன்பால்,

அளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும்,

வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை,

உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.

 

பதவுரை

விளம்பும்

கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான

ஆறு சமயமும்

ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும்

அவை ஆகிய

அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான

மற்றும்

குத்ருஷ்டி மதங்களும்

தன் பால்

தன் விஷயத்திலே

அளந்து காண்டற்கு அரியன் ஆகிய

எல்லைகாணவொண்ணாதனாயிருக்கிற

ஆதி பிரான்

ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன்

அழகும்

நித்யவாஸம் பண்ணுமிடமாய்

வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய

வளம்மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான

திருகுருகூர் அதனை

திருநகரியை

(நீங்கள்)

உம்மை

உங்களை

உய்யக் கொண்டு போகுறில்

உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்தீர்களாகில்

உளம் கொள் ஞானத்து

அந்தரங்கஜ்ஞானத்துக்குள்ளே

வைம்மின்

வைத்துச் சிந்தனை செய்யுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேதபாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் பண்ணுகிற துஸ்தர்க்கங்களால் அழிக்கவொண்ணாத ஐச்வர்யத்தையுடையனான எம்பெருமானெழுந்தருளியிருக்கிற திருநகரியை ஆச்ரயியுங்கோள் பிழைக்கவேண்டியிருந்தீர்களாகில் என்கிறார்.

வேதம் முதலிய சாஸ்த்ரங்களை ப்ரமணமாக இசையாதவர்கள் வேத பரஹ்யர்கள் எனப்படுவர்; அவற்றை ப்ரமாணமாக இசைந்துவைத்தும் அவற்றுக்குத் தவறான அர்த்தங்களைப்; பண்ணுமவர்கள் (அதாவது) எம்பெருமானொருவன் தவிர மற்ற தத்துவமொன்றுமேயில்லையென்றும், அவனுக்குத் குணமில்லை, நிக்ரஹமில்லை யென்றும் சொல்லுமவர்கள் குத்ருஷ்டிகளெனப்படுவார்; இவ்விருவகுப்பினரையும்பற்றிக் கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் ஒரு ச்லோக மருளிச்செய்கிறார்; அதாவது-*…- பாஹ்யா: குத்ருஷ்டய இதித்விதயேப்பாரம் கோரம் தமஸ் ஸமுபயாந்தி நஹீக்ஷஸே தாந், ஜக்தஸய காநநம்ருகைர் ம்ருகத்ருஷ்ணிகேப்ஸோ: காஸாரஸத்வநிஹதஸ்ய ச கோ விசேஷ:?* என்பதாம்.  இதன் பகவத் கடாக்ஷத்திற்கு இலக்காகமாட்டாமல் நசித்துப்போவர்கள்.  வேதத்தை அடியோடே ப்ரமாணமாக அங்கீகரியாதே துர்ஷிக்கின்ற பாஹ்யர்கள் நசித்துப்போவது யுக்தம்; அப்படியல்லாமல் வேதத்தை ப்ரமாணமாக அங்கீகரித்து வைதிகர்களென்று பேர்பெற்றிருக்கின்றவர்களும் நசித்துப்போவர்களென்னலாமோ என்ன; இருவகுப்பினரும் துல்ய யோகக்ஷேமர்களேயென்பது ஒரு த்ருஷ்டாந்த முகத்தாலே மூதலிக்கப்படுகிறது; விடாய்மிகுத்துத் தண்ணீரைத் தேடியோட இரண்டு ம்ருகங்கள் புறப்பட்டன; அவற்றில் ஒரு ம்ருகமானது தடாகத்தில் புகாதே கானலைக்கண்டு தண்ணீர்ப்பெருக்காக மயங்கி ஓடிக் கொண்டேயிருக்கையில் வழியிடையிலே நேர்பட்ட புலி முதலிய கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப்பட்டதாயிற்று. இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய்த்தீரத் தடாகத்திலேயே சென்று சேர்ந்தது; ஆனால் அடைவே இழியவேண்டிய துறையிலே யிழியாமல் துறைதப்பியிழியவே அங்குக் கிடந்த வொரு கொடிய விலங்குகளினால் அடித்துத் தின்னப் பட்டதாயிற்று.  இது இப்படியாக, மற்றொரு மிருகமானது விடாய்தீரத் தடாகத்திலேயே சென்று சேர்ந்தது; ஆனால் அடைவே இழியவேண்டிய துறையிலே யிழியாமல் துறைதப்பியிழியவே அங்குக் கிடந்த வொரு கொடிய ஜலஜந்துவாலே அது பகூஷிக்கப்பட்டொழிந்தது.  ஆக இரண்டு மிருகங்களும் தடாகப்ரவேச-அப்ரவேசங்களாலே சிறிது வாசி பெற்றிருந்தாலும் விநாசத்திலே வாசியற்றவர்களேயாவர்.  என்றதாயிற்று.  கானலிலே மயங்கியொழிந்த ம்ருகத்தின் ஸ்தானத்தில் பாஹ்யர்கள்; தடாகத்திலே யிழந்து துறைதப்பியொழிந்த ம்ருகத்தின் ஸ்தானத்திலே குத்ருஷ்டிகள் என்றுணர்க.

விளம்பும் ஆறுசமயமும் = சாக்ய, உலுர்க்ய, அக்ஷபாத, க்ஷபண. கபில, பதஞ்சலி மதங்கள் எனப்படுகிற ஆறும் பாஹ்யஸமயங்களாம்; சாக்யர்-பௌத்தர்; உலுர்க்யர்-சார்வாகர்; அக்ஷபாதரென்று கௌதமரைச் சொல்லி நையாயிகவைசேகூஷிகர்களை நினைக்கிறது. க்ஷபணர்-ஜைநர்.

அவையாகிய மற்றும்ஸ்ரீமற்றும் அவற்றோடொத்த குத்ருஷ்டிகளும் என்றபடி.  “அவையாகியும்” என்பது பன்னீராயிரப்படி யுரைக்.கு மாத்திரம் பாடம்.

மற்றும் என்பதற்கே குத்ருஷ்டிவர்க்கமெனப் பொருள்கொண்டு, அவையாகியும் என்பதற்கு ‘ஸபையாகத் திரண்டாலும்’ என்று பொருள் கூறினர் பன்னீராயிரவுரைகாரர்.  அவை-ஸபை; பாஹ்யர்களும் ருத்ருஷ்டிகளும் பெருந்திரளாகக் கூடினாலும் பரிச்சோதித்து அறிய முடியாதவன் எம்பெருமான் என்றபடி.

ஆறுசமயங்களுக்கு விளம்பும் என்று அடைமொழி கொடுத்தது-அர்த்தமில்லாத வெறும். சொற்களையே பிதற்றுகிறவர்களென்று காட்டினபடி.  ஆக, பாஹ்யர்களாலும் குத்ருஷ்டிகளாலும் சலிப்பிக்கவொண்ணாது ஸ்வரூபரூபகுண விபூதிகளையுடைய ஸர்வேச்வரன் எழுந்தருளி யிருக்குமிடமாய், வளம்மிக்க நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான திருநகரியை, உளங்கொள் ஞானத்து வைம்மின்-மாநஸஜ்ஞானத்துக்கு விஷயமாக்குங்கள் என்றபடி. இது யாரைநோக்கி யுரைக்கிற தென்னில்; உம்மில் உய்யக்கொண்டு போகுறில்= உஜ்விக்க விருப்பமுடையீராகில்.

போக +  உறில், போகுறில்; தொகுத்தல்.

 

English Translation

The six expounded doctrines and those like them cannot fathom Him; thus he sits, as Adipiran in kurugur surrounded by beautiful fields. If you seek liberation, bear him in your heart

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top