(3322)
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக,
கொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை?
வள்ளலே மணிவண்ணா உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே.
பதவுரை
|
கொள் என்று கிளர்ந்து எழுந்த |
– |
‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்று மேன்மேலும் பெருகித்தோற்றுகிற |
|
பெரு செல்வம் |
– |
பெரிய செல்வமானது |
|
நெருப்பு ஆக |
– |
நெருப்புப்போல் ஸமூல நாசம் பண்ணு நிற்கச் செய்தேயும் |
|
(அதில் நசை யொழியாமல்) |
||
|
கொள் என்று |
– |
அந்தச்செல்வத்தையே மேன் மேலும் கொள்ளும்படியாக |
|
தமம் மூடும்இ இவை உலகு இயற்கை என்ன |
– |
தமோ குணம் மேலிட்டுச் செல்லுகின்ற இந்த லோகஸ்வபான மிருந்தபடி என்னே! |
|
வள்ளலே |
– |
மஹாதாரனே! |
|
மணி வண்ணா |
– |
நீலமணிவண்ணனே; |
|
உன கழற்கே வரும் பரிசு |
– |
உன் திருவடிவாரத்திலேயே வந்து சேரும்படி |
|
அடியேனே |
– |
அடியேன் விஷயத்தில் |
|
வள்ளல் செய்து |
– |
ஔதார்யத்தைக் காட்டி |
|
உனது அருளால் |
– |
உனது பரம க்ருபையாலே கைக்கொண்டருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்தஹேது என்பதைக் கட்கூடாகக் காணாநிற்கச்செய்தேயும், பின்னையும் மேல்விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோகயாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார். நெருப்புக்கு ஆச்ரயாசம் என்று பெயர்; தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது நெருப்பின் இயல்பு; அதுபோலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் காணநிற்கச் செய்தேயும்-என்பது முதலடியின் கருத்து. செல்வம் விஞ்சி ஜீவிக்கப் பெறுமவர்களை அச்செல்வமே காரணமாகப் பொறாமையாளர்கள் சித்திரவதம் செய்வது உலகவியறகையாதரால் ஆழ்வார் இங்ஙனே யருளிச்செய்தது மிகப் பொருந்தும்.
நெருப்பாக என்றவிடத்தில் தொக்கியிருப்பதாகக் கொள்ளவேணும்.
கொள்ளென்று தமமுடும் = “பகல்கண்ட குழியிலே இராவிழுவாரைப் போலே” என்று ஒரு த்ருஷ்டாந்தம் அடிக்கடி ஆசாரியங்களி ஸாதிப்பதுண்டு; அதாவது, ஓரிடத்தில் ஒரு பெரிய பள்ளமிருக்கும்; அதனைப் பகலில் நன்றாகக் கண்டிருக்கச் செய்தேயும் இரவில் இருளிலே செல்லும்போது ஸ்பஷ்டமாகக் காணாநிற்கச் செய்தேயும் மீண்டும் அதனையே கொள்ளும்படியாக இப்படியும்; ஒரு தமோகுணம்வந்து மூடுமோவென்று ஆழ்வார் வியக்கிறார். தமஸ் என்னும் வடசொல் தமமெனத்திரிந்தது.
வள்ளலே மணிவண்ணா = வள்ளல் என்றால் தாராளமாகக் கொடுப்பவன் என்று பொருள்; எதைக்கொடுப்பவனென்னில், மணிவண்ணா! என்கிற பதச் சேர்த்தியினால் தனது திருமேனியையே முற்றுட்டாக அநுபவிக்கக் கொடுப்பவனென்பது பெற்ப்படம். “மாணிக்கப் பண்டாரத்தையிறே ஔதார்யம் பண்ணிற்று” என்பது நம்பிள்ளையீடு.
English Translation
Great wealth kindles raging fires of desire, then wraps the world in a cover of darkness all around. Benevolent gem-hued Lord, what ways are these? Wean me by your grace, and gift me your feet
