(3281)
என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக் கார்களும், தன்றனக்
கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை,
குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்,
நன்று சூட்டும் விதியெய் தினம் என்ன குறைநமக்கே?
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
|
என்றும் |
– |
பரத்வம் முதலான ஸர்வாவஸ்தைகளிலும் |
|
ஒன்று ஆகி |
– |
ஒரேப்ரகாரமுடையனாய்க் கொண்டு |
|
ஒத்தாரும் மிக்கார்களும் |
– |
ஸமராயும் அதிகராயும் இருப்பார் |
|
தன்தனக்கு |
– |
தனக்கு |
|
இன்றி நின்றானை |
– |
இல்லாமலிருப்பவனாய் |
|
எல்லா உலகும் உடையான் தன்னை |
– |
எல்லாவுலகத்தையும் தனக்கு •••ஷமாகவுடையனாய் |
|
மழை |
– |
மழையை |
|
குன்றம் என்றால் |
– |
மலை ஒன்றினாலே |
|
காத்த பிரானை |
– |
தடுத்த மஹோபகாரகனான வனைக்குறித்து |
|
சொல் மாலைகள் |
– |
சொல்மயமான மாலைகளை |
|
நன்று சூட்டும் விதி |
– |
அவன் ஆதரித்துச் சூடும்படி சூட்டுகைக்குற்ற பாக்கியத்தை |
|
எய்தினம் |
– |
கிட்டப்பெற்றோம்: (ஆதலால்) |
|
நமக்கு என்னகுறை |
– |
நமக்கு ஒருகுறை யுண்டோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “அரியதுண்டோ வெனக்கு இன்று தொட்டு மினியென்றுமே” என்று செருக்குத் தோற்றப் பேசினார். இத்தகைய செருக்கு எத்தாலே வந்ததென்ன, எம்பெருமானருளாலே வந்த தென்கிறாரிப் பாட்டில்.
பரமபத நிலையனாய் நிற்கும் நிலைமையோடு, மநுயாதி ஸஜாதீயனாய் அவதரிக்குமவதாரங்களோடு வாசியற எல்லா நிலைமைகளிலும் தன்னோடு ஒத்தவர்களும் மேம்பட்டவர்களுமின்றிக்கே யிருப்பவனாய், ஸகல லோகங்களையும் தனக்கு சேஷமாகவுடையனாய், அந்த சேஷவஸ்துக்களுக்கு இந்திரனால் நேர்ந்த ஆபத்தை, கண்டதொரு மலையாலே போக்கினவனான ஸர்வேச்வரனைத் திருவாய்மொழியாகிற சொல்மாலைகளாலே அழகாக அலங்கரிக்கும் படியானபாக்கியம் பெற்றோம்: ஆனபின்பு நமக்கு ஒரு குறையுண்டோ வென்கிறார்.
என்றும் ஒன்றாகி என்றது -மேலே சொல்லப்படுகிற, ஒத்தாரும் மிக்கார்களும் தனக்கு இல்லாமையாகிற விஷயம் எல்லா நிலைமைகளிலும் ஒரே விதமாகவேயிருக்குமென்றபடி. பரவ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரமென்கிற நிலைமைகளுக்குள்ளே ஒவ்வொரு நிலைமையும் ஒத்தாரும் மிக்காருமின்றி யிருக்குமென்கை.
தன்தனக்கின்றி நின்றானை என்கிற விடத்திற்கு ஒரு விசேஷார்த்தமுண்டு, ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி பணித்தாராம்; -“தன் தனக்கு என்றது தானான தனக்கு என்றபடி: ஒருவகைக்கு ஒப்பின்றிக்கேயிருக்கிறது பரத்வத்தில் அல்ல ‘ஆத்மாநம் மாநுஷம் மந்யே’ என்கிறபடியே, அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிறநிலையிலே” என்று.
மேலே கூறப்பட்ட அர்த்தம் எந்தச் சொல்லிலிருந்து கிடைக்கின்றது? என்று ஆராய வேணும். கேண்மின்: தனக்கு என்னாமல் தன்தனக்கு என்றதில் உட்புகுந்து ஆராயவேணும்; ஸ்ரீ பரதாழ்வானோடுகூட சித்திரகூடஞ் சென்ற வஸிடபகவான் ஸ்ரீராமபிரானை நோக்கி “…………………-ஆத்மாநம் நாதிவர்த்தேதா:” என்றான்; ‘தன்னை மீறாதே’ என்பது சப்தார்த்தம். இங்கே ஆத்மாநம் என்பதற்கு-‘உயிர் நிலையான பரதாழ்வானை’ என்று சிலர்பொருள் கூறுவதுண்டு. அப்படியல்லாமல் பட்டர் அருளிச் செய்தாவது-ஆத்மாநம் என்றது தானான தன்மையை யென்றபடி; தானான தன்மையாவது ஆச்ரித பாரதங்தரியம்; அதனை இழக்கவேண்டா என்பதாம். வடமொழியில் ஆத்மா என்பது போலத் தமிழில் தான் என்பதாம். அது தன்னிலும் தனக்கு என்பதற்கும் மேலாக, ‘தன்தனக்கு’ என்கையாலே எம்பெருமானுடைய தானானதன்மைமையே சுட்டிக்காட்டுகிற சொல் இது என்று கொள்ளவேணும். எம்பெருமானுடைய தானான தன்மை எதுவென்றால் ஆச்ரித பாரதந்திரியமே யென்பது கீழே மூதலிக்கப்பட்டது. ஆகவே, ஆச்ரிதபரதந்திரனாக அவதரித்த விடத்திலே ஒத்தாரும் மிக்காரு மில்லாதிருப்பவன் என்றதாயிற்று. இதனால் தேறிய கருத்து யாதெனில்; எம்பெருமானுடைய பரத்வத்திற்கு எல்லைகண்டாலும் காணலாம்; அவனுடைய ஸௌசீல்யத்திற்கு அதுகாணமுடியாது என்பதாம்.
இங்ஙனம் பூர்ணமான விஷயத்தை நாம் எங்ஙனம் பேசுவது! என்று கொண்டு மீளாமல், துணிந்து ஊடுருவப் பேசப் புகுந்த என்னுடைய பாக்கியமே பாக்கியம் என்றாராயிற்று.
English Translation
Upto himself without a peer or a superior, he bears all the worlds; he stopped the rains with a mountain. I have the fortune of singing his praise with a garland of sings which he fondly wears on his crown, what more do I want?
