(3280)
கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்,
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,
உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே?
பதவுரை
| கரிய மேனி மிசை |
– |
(திருக்கண்ணின்) கூரிய விழியின் மேலே |
| வெளிய நீறு |
– |
அஞ்சன நீற்றினை |
| சிறிதே இடும்; |
– |
அளவாக அணிகிற |
| பெரிய கோலம் |
– |
அளவிறந்த அழகினையுடைய |
| தடம் கண்ணன் |
– |
விசாலமான திருக்கண்களையுடையனாய் |
| விண்ணோர் பெருமான் தன்னை |
– |
நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனை |
| உரிய சொல்லால் |
– |
(இவ்வழகுக்குத்) தகுதியான சொற்களாலே |
| இசை மாலைகள் |
– |
இசைவடிவான மாலைகளையிட்டு |
| ஏத்தி |
– |
துதித்து |
| உள்ள |
– |
அநுபவிக்க |
| பெற்றேற்கு எனக்கு |
– |
பெற்றவனான எனக்கு |
| இன்று தொட்டும் |
– |
இன்று தொடங்கி |
| இனி என்றும் |
– |
இனிமேலுள்ள காலம் எல்லாம் |
| அரியது உண்டோ |
– |
துர்லபமாயிருப்பதும் ஒன்றுண்டோ |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘ஆழ்வீர் ! உமக்கு வேண்டுவது என் ? என்று எம்பெருமான் கேட்க, இது வரையில் நான் பெறாதே இனி ஸாதித்துத் தரவேண்டுவதொரு பொருளுண்டோ வென்கிறார். (கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும்) இதற்குப் பலவகையாகப் பொருள் பணிப்பர்கள். மேலே “பெரிய கோலத்தடங்கண்ணன்” என்று திருக்கண்களின் ப்ரஸ்தா வமிருக்கையாலே கரிய மேனி மிசை என்றது. திருக்கண்களில் கருவிழியினுடைய கறுத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே என்றபடி. வெளிய நீறு சிறிதேயிடும்-அஞ்ஜன சூர்ணத்தை மங்கலமாகச் சிறிது அணிந்து கொள்ளுகிற என்றபடி. “வெளியம்-அஞ்ஜன சூர்ணத்தை மங்கலமாகச் சிறிது அணிந்து கொள்ளுகிற என்றபடி. “வெளியம்-அஞ்ஜனம்” என்று பன்னீராயிரம், வேதாந்த தேசிகன் தாத்பர்யரத்நாவளியில் இப்பாசுரத்திற்காக “கர்ப்பூரா லேபசோபே” என்றருளிச் செய்திருக்கக்காண்கையாலே, சாமளமான திருமேனி யிலே பச்சைக்கருப்பூர தாளியையணிந்து கொள்ளுகிற என்றும் பொருள் கொள்ளலாம். வெளிய என்றது வெள்ளிய என்றபடி.
கரி அம்மேனிமிசை வெளிய, நீறு சிறிதேயிடும் என்று கொண்டு, கரி-குவலயாபீட யானையானது, அம்மேனிமிசை கண்ணபிரானது அந்தத் திருமேனியிலே, வெளிய-சீறிப் பாய்ந்தவளவிலே, சிறிதே-க்ஷ்ணகாலத்திற்குள், நீறு இடும்-அந்த யானையைப் பொடி படுத்தின-என்றானாம் ஒரு தமிழன்.
உரிய சொல்லால்-திருவாய்மொழிக்கு இது அஸாதாரணமான பெருமை ராமகதையைச் சொல்லுவதாக ராமாயணமென்று தொடங்கி, கங்கையின் உற்பத்தி, ஸூப்ரம் மண்யனுடைய உற்பத்தி, புஷ்பகவர்ணநம் முதலான கதைகளைப் பரக்கப் பேசுவதால் அஸத்கீர்த்தநம் பண்ணி வாக்கிலே அசுத்தி படைத்தான் வால்மீகி: ‘நாராயண கதை’ என்பதாகத் தொடங்கி ஸம்பவபர்வத்திலே பீமர் முதலான பற்பலருடைய உத்பத்தி ப்ரகாரங்களை விரிவாகப் பேசுகையாலும், ‘பூசல்பட்டோலை’ (யுத்த புஸ்தகம்) என்னும்படி பாரதப்போர் வகைகளையே பரக்கநின்று வருணித்த படியாலும் அஸத்கீர்த்தனத்திலே மிகவும் பரந்து அசுத்திபடைத்தான் வேத வ்யாஸபகவான். ஆகவிப்படி, தொடங்கினபடிக்குச் சேராமே அஸத்கீர்த்தநத்தைப் பண்ணி வாக்கை அசுத்தமாக்கிப் பின்பு அஸத் கீர்த்தந காந்தார பரிவர்த்தந பாம்ஸூலாம், வாசம் செளரிகதாலாப கங்கயைவ புநீமஹே.” என்று அதற்கு சுத்திபண்ண வேண்டாதபடி “திருமாலவன் கவி யாது கற்றேன்”. (திருவிருத்தம்) என்று திருமால் விஷயமான கவியென்று அடியில்வாயோலை யிட்டபடியே இதர விஷயஸம்பந்தமுள்ள ஒரு சொல்லும் ஊடு கலசாதபடி சொற்களைத் தெரிந்தெடுத்து விஷயத்திற்குத் தகுதியான சொற்களாலே அருளிச் செய்ததிறே திருவாய்மொழி.
இப்படித் திருவாய்மொழிபாடி அநுபவிக்கப் பெற்ற வெனக்கு இனி அருமையானது எதுவுமில்லை யென்றாராயிற்று.
English Translation
Lord of the celestials, he wears a patch of white mud over his dark forenead, he has large beautiful lake-like eyes. I have praised him with fitting worlds, woven into a garland of poems. From now on and forever, is mere anything beyond my reach?
