(3279)

(3279)

ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை, அமரர்தம்

ஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை,

மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்,

காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே.

பதவுரை

ஆற்ற

பொறுக்கப்பொறுக்க
நல்ல வகை

விலக்ஷ்ணமாயுள்ள (ஜ்ஞாந பக்திகள் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளாகிற) ப்ரகாரங்களை
காட்டும்

அடியார்களுக்குக் காட்டிக் கொடுக்கின்ற
அம்மானை

சர்வேச்வரனாய்
அமரர் தம் ஏற்றை

நித்தியஸூரிநாதனாய்
எல்லாப் பொருளும்

எல்லா அர்த்த விசேஷங்களையும் (கீதோபநிஷந் முகத்தாலே)
விரித்தானை

விரிவாக உபதேசித்தவனான
எம்மான் தன்னை

எம்பெருமானை
வினை

பாபங்களும்
நோய்கள்

பெரிய வ்யாதிகளும்
காற்றின் முன்னம் கடுகி

காற்றிலும் வேகமாக ஓடிப்போய்
கரிய

வெந்துபோம்படியாக
மாற்றம் மாலை புனைந்து

சொல்மாலையைத் தொடுத்து
ஏத்தி

துதித்து
நாளும்

ஸர்வகாலமும்
மகிழ்வு எய்திளேன்

மகிழ்ச்சியைப்பெற்றேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் அடியார்களுக்குச் செய்தருள நினைக்கும் நன்மைகளை ஒருகாலே செய்து முடிப்பதில்லை; பொறுக்கப் பொறுக்கச் சிறிது சிறிதாகச் செய்தருள்வன். ஆசார்யஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்திலுள்ள *புணர்தொறு மென்னக் கலந்துபிரிந்து * இத்யாதி சூர்ணிகை இங்கு அநுஸந்தேயம்: அதன் கருத்தாவது-* பொய்ந் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்புமிந் நின்ற நீர்மையினி யாமுறாமையென்று பிரார்த்தித்தபோதே ஆழ்வாருடைய அபேக்ஷிதம் செய்துவிடாமலிருக்க இவரை இந்நிலத்திலே வைத்துத் தன்னுடைய ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஜ்ஞானபக்திகளை வளர்த்தது எதுக்காக வென்னில்; கனமான கர்ணபூஷணமிடுதற்கு இடமாம்படி நூலிட்டுத் திரியிட்டுக் குதம்பையிட்டுக் காது பெருக்குமாபோலவும், ஒருமாஸம் உபவாஸமிருந்தவர்களுக்கு முதலிலே போஜனமிட்டால் பொறாதென்று சோற்றையரைத்து உடம்பிலே பூசிப் பொரிக்கஞ்சி கொடுத்துப் பொரிக்கூழ் கொடுத்து நாளடைவிலே போஜனம் பொறுப்பிக்குமா போலவும், பகவதநுபவம் கனாக்கண்டறியாத விவர்க்கு அதிச்லாக்யமாய் நித்யஸூரிகள் அநுபவிக்கிற போகத்தை முதன் முதலிலே கொடுத்தால் ஸாத்மியா தென்று கருதி அது ஸாத்மிக்கைக்காக செய்வித்தபடி என்கை.

ஆற்ற நல்லவகை இன்னாருக்குக் காட்டும் என்னாமையாலே இது பொதுவிலே சொன்னதித்தனை. ஆழ்வாரிடத்திலே ஸமந்வயம் காணலாம்.

எல்லாப்பொருளும்; விரித்தானை – அறியவேண்டிய பொருள்களையெல்லாம் பகவத் கீதை முகமாக விரித்தருளிச் செய்தவனென்றபடி.  அப்பொருள்களாவன.-ஜீவாத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் பேதம், ஜீவர்களுக்குள் பரஸ்பர பேதம், அசித்திற்காட்டில் சித்துக்குண்டான வாசி, ஆத்மாக்களின் நித்யத்வம் தேஹங்களின் அநித்யத்வம், ஸகலப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் பண்ணுவித்தலாகிற  நியாமகத்வம் ஈச்வரனுக்கேயுள்ள தென்பது, பக்திமான்கள் நிமித்தமாகவும் அவதார ப்ரயுக்தமாகவும் அவன் எளியனாகின்றானென்பது, ஆச்சயிக்குமிடத்து அனைவர்க்கும் ஸமனாயிருக்கிற னென்பது (அதாவது) அறிவு ஒழுக்கம் ஜாதி முதலியவற்றால் ஏற்றத்தாழ்வு பெரிது முடைய எவ்வகுப்பினர்க்கும் ஒருங்கே ஆச்ரயணீயனாக இருத்தல், அஹங்காரதோ‘ம், இந்த்ரிய ப்ராபல்யம், மற்றை யிந்திரியங்களிற் காட்டிலும் மநஸ்ஸினுடைய ப்ராதாந்யம், நான்கு வகைப்பட்ட ஸூக்ருதி களின்பேதம், தேவாஸூரவிபாகம், விபூதியோகம், விச்வரூபதர்சநம், ஸாங்கபத்தி, அங்கப்ரபத்தி ஸ்வதந்த்ரப்ரபத்தியாகிற இருவகை ப்ரபத்தி என்றிப்படிப்பட்ட பொருள்களாம். ஸ்ரீவசந பூஷணத்தில் முதல் ப்ரபரணத்தில்-“அறியாதவர்த்தங்களையடைய அறிவித்து” என்றவிடத்து மணவாளமாமுனிகளின் வியாக்கியானத்தில் இவ்வர்த்த விசேஷவிவரணம் நன்கு காணத்தக்கது.

இப்படி எம்பெருமான் பண்ணின வுபபாரத்திற்குக் கைம்மாறு காணாமையாலே ஏத்தினேன், அதுதிருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று: துக்கங்களும் துக்கஹேதுவான கருமங்களுமெல்லாம் விரைவாகவே தொலைந்தன வென்கிறார்.

காற்றில் முன்னங்கடுகி என்றது-விரைவின் மிகுதியைச் சொன்னபடி.

English Translation

The Lord of celestials, my Lord, unfolds all meaning.  He patiently discloses his good ways, and burns to dust all sickness and sin, like cinders before a wind, Singing his praise with woven worlds of poetry I have attained him

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top