(3278)
மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்,
தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை,
நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்,
ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே.
பதவுரை
| மேவி நின்று |
– |
நெஞ்சு பொருந்தியிருந்து |
| தொழுவார் |
– |
அனுபவிப்பாருடைய |
| வினை போக |
– |
பாபங்கள் யாவும் நசிக்கும்படி |
| மேவும் |
– |
தான் அவர்களோடே கலக்கின்ற |
| பிரான் |
– |
மஹோபகாரகனாய் |
| துர்வி அம் புள் |
– |
சிறகுகளையுடைய அழகிய பெரிய திருவடியை |
| உடையான் |
– |
ஊர்தியாகவுடையனாய் |
| அடல் ஆழி |
– |
போர்வல்ல திருவாழியை யுடையனான |
| அம்மான் தன்னை |
– |
ஸர்வேச்வரனை |
| நா இயலால் |
– |
நாவினுடைய தொழிலாலே |
| இசை மாலைகள் |
– |
இசைரூபமான் மாலைகளையிட்டு |
| ஏத்தி நண்ண பெற்றேன் |
– |
ஏத்துகையாகிய நண்ணுதலைப் பெற்றேன்; |
| ஆவி |
– |
எனக்கு அந்தாராத்ம பூதனான எம்பெருமான் |
| என் ஆவியை |
– |
என்னுடைய ஆத்மாவை |
| செய்த ஆற்றை |
– |
இங்ஙனம் செய்த ப்ரகாரத்தை |
| யான் அறியேன் |
– |
நான் அறியமாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நித்ய ஸூரிநாதனாயிருந்துவைத்து நித்ய ஸம்ஸாரியான என்பக்கலில் பண்ணியருளின மஹோபகாரதம் என்னே! என்று ஈடுபடுகிறார்.
எம்பெருமானுக்கு ப்ரணதார்த்திஹரன் என்று ஒரு திருநாமமுண்டு; அதன் பொருளை முதலடியில் அநுஸந்திக்கிறார். மேவி நின்று தொழுகையாவது தன்னையே விரும்பித் தொழுகை; ப்ரயோஜநாந்தரங்களுக்கு மடியேலாதே அநந்யப்ரயோஜநர்களாய்த் தொழுகை. “நம்பும் மேவும் நசையாகும்மே” என்கிறபடியே மேவுதலாவது ஆசைப்படுகை; தன்னையே ஆசைப்பட்டு என்றபடி. ப்ரயோஜநாந்தரங்களை ஆசைபட்டுக் தொழுவாருடைய வினைகளைப் போக்கமாட்டானோ? என்று கேட்கவேண்டா.
துர்வி அம் புள்ளுடையான் -துர்வியென்று சிறகுக்குப்பெயர்; கருத்மானுக்குச் சிறகிருக்கின்றமையை இவர் எடுத்துரைக்க வேணுமோ? வேண்டர் ஆயினும் உரைப்பது அநுபவராஸிக்யத்தாலேயாகும். “பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத் திண்கொள்ள வோர்க்கும் கிடந்தென் செவிகளே” என்று கீழே அருளிச் செய்தாரே, ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே பெரிய திருவடியின் சிறகே உறைந்திருக்கும் போலும். அம்புள் -அழகிய புள்; என்ன அழகு என்னில்; *** த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்க சோபிநா.” என்று ஆளவந்தார் அருளிச்செய்தபடியே எம்பெருமானுடைய திருவடி பட்டுப் பட்டுத் தழும்பேறின அழகு.
அடலாழியம்மான்=அடல்-கொல்லுகை, வலிமை, போர் வெற்றி என நான்கு பொருள்களுண்டு.
நாஇயலால் இசைமாலைகளேத்தி -நாப்புறட்டினதெல்லாம் இயலும் இசையுமாயிற்றென்பர். கவிபாடவேணுமென்கிற முயற்சியின்றியே நாக்கு இயம்பிற்றெல்லாம் நல்லிசை மாலைகளாயினவாம். திருவாய்மொழியைக் கொண்டு அவனையேத்தி அநுபவிக்கப் பெற்றே னென்கை.
(ஆவி என்னாவியை இத்யாதி.) ஆவி என்கிறது எம்பெருமானை; உலகுக்கு ஓரயிராயிருக்கையாலும், வேதாந்தங்களிலே ஆத்மா என்று எம்பெருமானை வழங்கியிருக்கையரலும் ஆவியென்னத் தட்டில்லை, (என் ஆவியைச் செய்தவாற்றை யானறியேன்) விபுவான் தான் அணுவான வெள்ளைத் தன்னிலும் மேற்பட்ட (அல்லது, தன்னோடொத்த) ஆனந்தத்தையுடையேனாம்படி பண்ணினவிதம் ஆச்சரியம் என்றவாறு.
English Translation
He rides the Garuda with beautiful wings and bears a powerful discus. My Lord loves and cares for devotees who stand and worship him. I have sung his praise with my tongue and attained him. I do not understand the way the spirit moves my soul!
