(3264)

(3264)

மண்ணை இருந்து துழாவி, வாமனன் மண் இது என்னும்,

விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்,

கண்ணை உள்நீர் மல்க நின்று, கடல்வண்ணன் என்னும், அன்னே! என்

பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே?

 

பதவுரை

பெய் வளையீர்

கையில் வளையணிந்த மாதர்காள்!

மண்ணை இருந்து துழாவி

(என் மகளானவள்) பூமியைத் துழாவி

இது வாமனன் மண் என்னும்

இது (எம்பெருமான்) வாமனனாய் அளந்து கொண்ட மண்’ என்று கூறுகின்றாள்:

விண்ணை தொழுது

ஆகாசத்தை (நோக்கி) அஞ்சலி பண்ணி

அவன் மேவு வைகுந்தம் என்று

‘அவ்வெம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டம்’ என்று சொல்லி

கை காட்டும்

தன் கைகளாலே (பிறர்க்கும்) காட்டா நின்றாள்;

உள் நீர்

அகவாயில் கண்ணீரானது

கண்ணை மல்க நின்று

கண்ணையும் விஞ்சிப் புறப்படும்படி நின்று

கடல் வண்ணன் என்னும்

கடல்போலும் நிறத்தையுடையவன் என்று சொல்லுகின்றாள்;

அன்னே

அம்மே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என் பெண்ணை பெரு மயல் செய்தார்க்கு  -என்னுடைய மகளை இப்படி அதிசயமான பிச்சேறும்படி பண்ணினவருக்கு என் செய்தேன்  -யாது செய்வேன்?

-பராங்குச நாயகியின் திருத்தாயார் மகளுடைய செய்தியை வினவ வந்தவர்களுக்கு அறிவியா நின்றுகொண்டு ‘இப்படி யிவளை எம்பெருமான் பிச்சேற்றினானே!  இதற்கு நான் என் செய்வேனென்கிறாள்.  ‘பண்டு எம்பெருமான் இவ்வுலகத்தை அளந்தருளினபோது அவன் திருவடிகளோடே ஸம்பந்தம் பெற்றது இந்த மண்’ என்று சொல்லி ஆழ்வார் போதுபோக்குகிறபடியை முதலடி தெரிவிக்கும்.  உலகத்தில் எல்லாரும் மண்ணை மண்ணாகவே நினைத்துக்கிடப்பர்கள்; ஆழ்வார் அங்ஙனன்றிக்கே அதுதன்னிலே ஒரு விசேஷ ப்ரதிபத்தி பண்ணுகிறபடி.

விச்வாமிதரமுனிவன் யாகரக்ஷணர்த்தமாக ஸ்ரீராம லக்ஷ்மணர்களை அழைத்துச் செல்லாநிற்கையில், பெருமாள் ஒரு சோலையைக்கண்டு ‘இதுஎன்ன’ என்றுகேட்க, முனிவன் *** “அயம் ஸித்தாச்ரமேச நாம” என்று தொடங்கிச் சொல்லி வந்து”

*** மயா து பக்த்யா தஸ்யைவவாமநஸ்யோப புஜ்யதே.” என்றான்; இது முன்பு ஸித்தாச்ரமமாய் ஸ்ரீவாமநமூர்த்தி எழுந்ததருளி யிருந்த தேசமாயிற்று; அப்பெருமான் இவ்விடத்தைவிட்டு அகன்ற பின்பு அவன் பக்கல் பக்தியாலே விடமாட்டாமல் அம்மண்ணை மோந்து கொண்டு கிடக்கின்றேன்-என்பது விச்வாமித்ரன் சொன்ன வார்த்தையின் கருத்து.  அபிநிவேசமுடையார்படி இதுவாயிற்று.

நிலத்திற்குக் குணம் மணமென்று சாஸ்த்ரஜ்ஞர்களின் கொள்கை; கந்தவதி ப்ருதிவி” என்பர்கள்; எம்பெருமானுடைய நறுமணம் மிக்க திருவடியின் ஸம்பந்தம் பெற்றதனால்தான் மண்ணுக்கு மணமுண்டாயது என்று பராங்குச நாயகியின் உபந்யாஸம் போலும்.

விண்ணைத்தொழுது அவன் மேவு வைகுந்தமென்று கைகாட்டும்-மண்ணைத்துழாவிப் பேசினபடி கீழே சொல்லிற்று; விண்ணைத்தொழுது பேசுகிறபடி இதில் சொல்லுகிறது.  ஆகாசத்தை நோக்கித் தொழுது ‘எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற திருநாடு அதோ பாருங்கள்’ என்று சொல்லிக் கைகாட்டுகின்றா ளென்கை.

இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்தி;-“ஆர்ஷ்டிஷேணனாச்ரமத்திலே நின்று பரமபதம் கண்டார்களிறே சிலர்” என்றுள்ளது.  மஹாபாரதத்தில் வநபருவத்தில் நூற்றறுபதாமத்யாயத்தில் ஆர்ஷ்டிஷேண னென்னும் ராஜர்ஷிக்கும் தருமபுத்திரர்க்கும் ஸம்வாதம் நடைபெறுகின்றது.  அங்கு ******************   அப்பகூஷா வாயுபகூஷாச் ச” என்கிற பதினாறாவது சுலோகம் தொடங்கிச்சொல்லி வருகையில் இவ்விஷயம் காணத்தக்கது.  அஸ்யாதிக்ரம்ய சிகரம் கைலாஸஸ்ய யுதிஷ்டிர, கதி : பரமஸித்தாநாம் தேவர்ஷீணாம் ப்ரகாசதே.” என்கிற ச்லோகம் இங்கு விலகூஷிதமாயிருக்கலாம் போல் தோன்றுகிறது.

(கண்ணையுள் இத்யாதி) ஹஸ்தசேஷ்டையாலே திருநாட்டைக் காட்டின வத்தனையொழிய, திருநாட்டில் அவனிருக்கிறபடியைக் காணப்பெறாமையாலே கண்ணீர்மல்க நின்று தன்னாற்றாமையாலே திருவடிவத்தை நினைத்துக் கடல்வண்ணனே யென்கிறாள்.  கடல் போன்ற திருமேனியைக் காட்டியன்றோ என்னை இங்ஙனம் வியாமோஹிக்கச் செய்தது என்று தெரிவித்தவாறு.

(என்பெண்ணை இத்யாதி) இங்ஙனே என்மகளுக்கு லோகவிலக்ஷணமான வியாமோஹத்தை உண்டுபண்ணின மஹாநுபாவன் விஷயத்தில் நான் செய்யக்கூடியது யாது?  அவரை இங்குவந்து சேரும்படி செய்பவல்லேனோ?  அவர் வருமளவும் ஆறியிருக்கும்படி இவளுக்குச் சொல்லவல்லேனோ? ஒன்றும் மாட்டுகிறிலேன் என்ற கருத்து.

 

English Translation

O Bangled Ladies, what can I do the Lord who made my daughter love-sick. She caresses the Earth and says, This is Vamana’s Earth!” She points to the sky and says, “That is his Vaikunta”.  Her heart’s grief overflows from her eyes; “Ocean-hued Lord!”, She sighs

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top