(3259)

(3259)

குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா,

குரைக ழல்கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே,

விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்,உன்

உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே.

 

பதவுரை

குரை கழல்கள் நீட்டி

(வீரக்கழல்) ஒலிக்கப்பெற்ற திருவடிகளைப் பரப்பி

மண் கொண்ட

ஜகத்தை அளந்து கொண்ட

கோலம் வாமனா

வடிவழகிய வாமன மூர்த்தியே!

குரை கழல்

அத்திருவடிகளைக் குறித்து

கை கூப்புவார்கள்

ஓர் அஞ்ஜலிபண்ணுமவர்கள்

கூட நின்ற

தன்னையே வந்து அடையும் படி நின்ற

மாயனே

ஆச்சரிய பூதனே!

விரைகொள் பூவும்

பரிமளம் கொண்ட பூக்களையும்

நீரும்

(பாத்யம் முதலியவற்றுக்கான) தீர்த்தத்தையும்

கொண்டு

ஏந்திக்கொண்டு

ஏத்த மாட்டேன் ஏலும்

 

உன்னைத் துதிக்கவல்லேனல்லெனினும்,

உரை கொள் சோதி

வாய்கொண்டு சொல்ல வொண்ணாதபடி வாக்கை மீறியிருக்கின்ற சோதியையுடைய

உன் திரு உருவம்

உன்னுடைய திருமேனியானது

என்னது ஆவி மேலது ஏ

என்னுடைய ஸத்தையைப் பற்றியிரா நின்றதே! இது என்ன அற்புதம்!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் ஒருவிதமான கிஞ்சித்காரமும் செய்யப்பெற்றிலேனாகிலும், அநந்யார்ஹமாக்கி அடிமைகொள்ளுமியல்வினனான வுன்னுடைய வடிவு என் ஆத்மாவை விஷயீகரித்திராநின்றதென்கிறார்.

“குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட” என்ற இவ்விடத்து ஒரு சங்கையுண்டாகும்; பகவான் மாவலியிடத்து நீரேற்றுப் பெற்றபின்பு ஒரு திருவடியினால் மண்ணுலகத்தையும் மற்றொரு திருவடியினால் விண்ணுலகத்தையும் அளந்தருளினதாகவன்றோ வரலாறு;  இங்கு ‘மண் கொண்ட’ என்றதற்குச் சேர ‘குரைகழல் நீட்டி’ என்று ஒருமையாக இருக்கவன்றோ தகுவது; ‘குரைகழல்கள்’ என்று பன்மையாக இருக்கத் தகுதியில்லையே; “மண்ணும் விண்ணுங் கொண்ட” என்றிருந்தாலன்றோ ‘கழல்கள் நீட்டி’ என்ற பன்மை பொருந்தும்-என்பதாக.

இதற்கு இரண்டுவகையாகப் பரிஹாரம் கூறலாம்; “பூஜாயாம் பஹூவசநம்” என்ற வட நூலாரின் முறை தமிழர்க்கும் உடன்பாடேயாதலால் ஒரு திருவடியையே பன்மையாகக் கூறினது உபசாரம்பற்றி என்னலாம்; அன்றி, மண் என்றது பொதுப்பட உலகத்துக்கு வாசகம் என்றுகொண்டு, கீழுலகங்களையும் மேலுகங்களையும் அளந்துகொண்ட என்றதாகக்கொள்ளலாம்.  மண் என்றது விண்ணுக்கும் உபலக்ஷணம் என்னலாமாயினும் இந்த ஸமாதானம் பஹூவசந நிர்வாஹகமாகாது.  மற்றும் எல்லார் வாய்க் கேட்டுணர்க.

கோலவாமனா  மண் இரக்குங் காலத்தில் வாமன வேஷமிருந்ததேயன்றி மண்கொண்ட காலத்தில் அந்தத் திருக்கோலமில்லையே;  “மண்கொண்ட திரிவிக்கிரமா!” என்றன்றோ சொல்லியிருக்கவேண்டும்; குரைகழல்கள் நீட்டியானபின்பு கோலவாமனனாக்க கூறத் தகுதியில்லையே! என்று சங்கை பிறக்கும்.  இதற்கு நம்பிள்ளையருளிச்செய்யுமது காணீர்;-“மண்கொண்டபின்பும் வாமனவேஷம்  இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி. இந்த்ரனுக்கு ராஜ்யங் கொடுக்கைக்காகவன்றிக்கே” என்று-த்ரிவிகரமனான கோலத்திற்காட்டிலும் மன்னன்றன் தேவிமார் கண்டு மகிழ்வெய்தக்கொண்ட மான்குறள் கோலவடிவிவே மிகவுமழகியதாதலால் அதனை எம்பெருமான் மாற்றிக்கொண்டாலும் ஆழ்வார் திருவுள்ளம் மாற்றிக் கொள்ள இசையவில்லைபோலும்.

குரைகழல்; கை கூப்புவார்கள் கூடநின்ற மாயனே!  தனியே இதுவொரு விளி; உன்னுடைய திருவடிகளை நோக்கி அஞ்ஜலி பண்ணுமவர்கள் யாவரோ அவர்கள் உன்னைக் கூடுவர்கள் என்பது ஒரு பொருள்; “கைகூப்புவார்கள் குரைகழல் கூட நின்றமாயனே!” என்று அந்வயமாக்கி, உன்னை நோக்கி ஓர் அஞ்ஜலி பண்ணுமவர்கள், திருவடிவாரத்திலே நித்யவாஸம் பண்ணலாம்படி அவர்களை விஷயீகரிப்பவனே! என்பது மற்றொரு பொருள். ஓர் அஞ்ஜலி பண்ணினவளவுக்கு இத்தனை பலனாவதே! என்ற வியப்புத்தோன்ற மாயனே! என்கிறார். சிலரை ப்ரயோஜநாந்தரங்களுக்காகத் திருவடிகளில் வந்து வணங்குமாறு செய்வதும், சிலரை அநந்ய ப்ரயோஜநமாக வணங்கச்செய்து “சேவடி செவ்வி திருக்காப்பு” என்று மங்களாசாஸநமே யாத்திரையாம்படி செய்வதுமாயிருக்கிற (எம்பெருமானது) மாயச் செயலைத் திருவுள்ளம் பற்றி மாயனே! யென்கிறார்.

(விரைகொள் பூவும் இத்யாதி.) ஓர் அஞ்சலி மாத்திரத்தினால் அடையலாம்படி எளியவனாயிருக்கிற உன் விஷயத்திலே சில புஷ்பங்களையும் தீர்த்தத்தையுங்கொண்டு வழிபாடு செய்து ஸ்வரூபம் நிறம்பெற ப்ராப்தமாயிருக்க, அங்ஙனம் பெற்றிலேனேயாகிலும், உன்னுடைய திருவடிக்கு என் ஆத்மஸத்தையே தாரகமாயிற்றே! இதென்ன ஆச்சர்யமென்கிறார். “ஆழ்வாருண்டானால் நானுண்டு” என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருக்கிறபடியை ஆழ்வாரறிந்து அருளிச்செய்தாராயிற்று.

(உரை கொள் சோதித் திருவுருவம்  இங்கே ஈடு;-“உரை கொள்ளுகையாவது, அது அது என்று வாய் புலற்றும்படியாயிருக்கை.  ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந் கதா:; ராமபூதம் ஜகதபூத் ராமே ராஜ்யம் ப்ரசாஜதி. என்னா நிற்பர்களிறே அன்றிக்கே, பேச்சுக்கு அவிஷயமான திருமேனியென்னுதல்.  மாற்றுமுரையுமற்ற திருமேனியென்னுதல்.”

 

English Translation

O Lovely Manikin! You extended your tinkling feet and took the Earth.  O Lord who gives refuge to those who come with folded hands!  I do not worship you with fragrant flowers and water.  Yet your mysterious radiance stands guard over my soul

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top