(3245)
கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே
பதவுரை
|
ஊழ்வினையேன் |
– |
பெரும்பாவத்தை யுடையேனாகிற எனது |
|
தட தோளி |
– |
பெருந் தோள்களை யுடையளான பெண் பிள்ளை |
|
சமயிகள் |
– |
சமயவாதிகள் |
|
கோது இல |
– |
குற்றமற்ற |
|
வண் புகழ் கொண்டு |
– |
விலக்ஷணமான குணங்களைக் கொண்டு |
|
பேதங்கள் சொல்லி |
– |
தாம்தாம் பற்றிய குணங்களின் ஏற்றங்களைச் சொல்லி |
|
பிதற்றும் பிரான் |
– |
பிதற்றும்படியாகவுள்ள ஸ்வாமியான |
|
பரன் |
– |
பரம புருஷனுடைய |
|
பாதங்கள்மேல் |
– |
திருவடிகளின்மேலே |
|
அணி |
– |
(நித்ய முக்தர்கள்) சாத்தின |
|
பைம் பொன் |
– |
பசும்பொன்போல் விரும்பத்தக்க |
|
துழாய் என்றே ஓதும் |
– |
திருத்துழாயென்றே சொல்லுகின்றாள். |
|
ஆல் |
– |
அந்தோ) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருநாட்டி லெழுந்தருளி யிருக்கிற பராத்பரனுடைய திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள். முன்னிரண்டடிகள் பரமபதநாதனை வருணிப்பன. எம்பெருமானது திருக்குணங்களிலே புகுந்துவிட்டால் ஒவ்வொரு குணத்தினுடைய அதிசயமும் எல்லை காண வொண்ணாததாயிருக்கும்; ப்ரவதத்திற்கு ஈடான குணங்களும் ஸௌலப்யத்திற்கு ஈடான குணங்களுமாக வகுக்கப்பட்டுள்ள யெடுத்துரைத்துக் கொண்டாட, இங்ஙனே வாதவிவாத கலஹங்கள் ஏற்பட்டுவிடும்; இத்தகைய குணாநுபவ விவாதமேயாய்ச் செல்லுமாம். பரமபதத்தி;ன் “பிணங்கியமார் பிதற்றுங் குணங்கெழு கொள்கையினானே” என்று (1-6-4) கீழேயுமருளிச் செய்யப்பட்டது.
சமயிகள் என்றது-ஒவ்வொரு குணத்தின் அநுபவத்திலே ஊற்றமுற்று அதைப் பெருமைப்படுத்திச் சொல்வதையே தமது மதமாகக் கொண்டவர்கள் என்றபடி. உபநிஷத்துக்களில், தஹாவித்யை உபகோஸவித்யை சாண்டில்யவித்யை அகூஷிவித்யை வைச்வாநரவித்யை என்றபடி அநேக வித்யைகள் கூறப்பட்டுள்ளன; அவற்றிலே ஊன்றினவர்களைச் சொல்லுகிறதாயும் அருளிச் செய்வர்கள்.
கோதுஇலவண்புகழ் ஒரு குணத்தை யநுபவிக்கும்போது இன்னொரு குணத்திலே நெஞ்சு செல்லுமாகில் அது குணத்திற்குக’ கோதாகும்; அஃதில்லாமை சொன்னமுகத்தால் ஒவ்வொரு குணமும் தனித்தனியே பரம யோக்யமாக அனுபவிக்கலாம்படி ஸாரஸ்யம் மிக்கிருக்கின்றமை சொன்னபடி.
பேதங்கள்சொல்லி பேதமாவது விசேஷம்; தாங்கள் அநுபிக்கிற குணங்களுக்கு ஏற்றங்களைச் சொல்லி என்றபடி. சீலகுணத்தை யநுபவித்து ‘இதுவும் ஒரு குணமே! இதுபோலேயோ வீரகுணம்’ என்பார்களாம். ஆக இப்படி அநுபவிக்கும்படிமிடைந்த திருக்குணங்களை யுடையனான ஸ்ரீவைகுண்டநாதனுடைய திருவடிகளில் நித்ய ஸூரிகளும் முக்தர்களும் சாத்தின திருத்துழாயைப் பற்றியே இவள் பலகாலும் அலற்றுகின்றாளென்றதாயிற்று.
English Translation
My sinful daughter with long arms prates only of the golden Tulasi garland on the radiant feet of the Lord, -who is praised by raving philosophers
