(3146)
ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னென் நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.
பதவுரை
|
வானவர்க்கு |
– |
நித்யஸூரிகளுக்கு |
|
ஈசன் |
– |
தலைவன் |
|
என்பன் |
– |
என்று சொல்லுவேன் |
|
என்றால் |
– |
இப்படிச் சொன்னால் |
|
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண் |
– |
கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில் |
|
பாசம் வைத்த |
– |
ஆசாபாசத்தை வைத்தருளினின்ற |
|
பரம் சுடர்சோதிக்கு |
– |
நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான |
|
திருவேங்கடத்தானுக்கு |
– |
திருவேங்கட முடையானுக்கு |
|
அது தேசமோ |
– |
நான் சொன்னது ஒரு பெருமையோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “எண்ணில் தொல்புகழ்வானவரீசன்” என்றார் கீழ்ப்பாட்டில்; அதனால் நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுபவிக்கக் கொடுத்தானென்பதை ஒரேற்றமாக அருளிச் செய்தார்; மிகவும் நீசனான என் பக்கலிலே பாசம் வைத்திருக்குமப் பெருமானுக்கு அது ஓர் ஏற்றமோ என்கிறாரிப்பாட்டில்.
‘வானவர்க்கு ஈசன்’ என்று சொல்லுகிறது திருவேங்கடத்தானுக்குத் தேசமோவென்கிறார். *கானமும் வானரமும் வேடுமானவிவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிறவன் நித்யஸூரிகட்கு முகங்கொடுக்கிறானென்பது எங்ஙனே ஏற்றமாகும்? * அயர்வறு மமரர்களதிபதி யென்கை ஸ்ரீவைகுண்டநாதனுக்கு ஏற்ற மாகுமத்தனையல்லது திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாகாது காணும்.
அஃது ஏற்றமன்றாகில், பின்னை எதைத் திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைக்கின்றீர்? என்ன; அதற்கு விடையளிக்கின்றார்போலும் பின்னடிகளால், *அமர்யாத க்ஷுத்ரச்சலமதிரஸூயாப்ரஸவபூரடி* இத்யாதிப் புடைகளிலே ஆளவந்தார் போல்வார் அருளிச் செய்கிற கணக்கிலே மிகவும் நிஹீநனான என் நிறத்தில் ஆசாபாசம் வைத்து அதனால் புகர் படைத்திருக்கின்ற எம்பெருமானை வானவரீசனென்பது என்ன பெருமை! என்றாராயிற்று.
என்கண்பாசம்வைத்த என்பதற்கு வேறு வகையாகவும் பொருளுரைப்பர்; தன் விஷயமான பாசத்தை என் பக்கலிலே (எனக்கு) உண்டாக்கின என்று.
English Translation
Does it behove his glory to be praised by me, -lowly and mertless? Yet I have his love!
