(3146)

(3146)

ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது

தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,

நீச னென் நிறை வொன்றுமி லேன்,என்கண்

பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

 

பதவுரை

வானவர்க்கு

நித்யஸூரிகளுக்கு

ஈசன்

தலைவன்

என்பன்

என்று சொல்லுவேன்

என்றால்

இப்படிச் சொன்னால்

நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண்

கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில்

பாசம் வைத்த

ஆசாபாசத்தை வைத்தருளினின்ற

பரம் சுடர்சோதிக்கு

நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான

திருவேங்கடத்தானுக்கு

திருவேங்கட முடையானுக்கு

அது தேசமோ

நான் சொன்னது ஒரு பெருமையோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “எண்ணில் தொல்புகழ்வானவரீசன்” என்றார் கீழ்ப்பாட்டில்; அதனால் நித்யஸூரிகளுக்குத் தன்னை அநுபவிக்கக் கொடுத்தானென்பதை ஒரேற்றமாக அருளிச் செய்தார்; மிகவும் நீசனான என் பக்கலிலே பாசம் வைத்திருக்குமப் பெருமானுக்கு அது ஓர் ஏற்றமோ என்கிறாரிப்பாட்டில்.

‘வானவர்க்கு ஈசன்’ என்று சொல்லுகிறது திருவேங்கடத்தானுக்குத் தேசமோவென்கிறார். *கானமும் வானரமும் வேடுமானவிவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிறவன் நித்யஸூரிகட்கு முகங்கொடுக்கிறானென்பது எங்ஙனே ஏற்றமாகும்? * அயர்வறு மமரர்களதிபதி யென்கை ஸ்ரீவைகுண்டநாதனுக்கு ஏற்ற மாகுமத்தனையல்லது திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாகாது காணும்.

அஃது ஏற்றமன்றாகில், பின்னை எதைத் திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைக்கின்றீர்? என்ன; அதற்கு விடையளிக்கின்றார்போலும் பின்னடிகளால், *அமர்யாத க்ஷுத்ரச்சலமதிரஸூயாப்ரஸவபூரடி* இத்யாதிப் புடைகளிலே ஆளவந்தார் போல்வார் அருளிச் செய்கிற கணக்கிலே மிகவும் நிஹீநனான என் நிறத்தில் ஆசாபாசம் வைத்து அதனால் புகர் படைத்திருக்கின்ற எம்பெருமானை வானவரீசனென்பது என்ன பெருமை! என்றாராயிற்று.

என்கண்பாசம்வைத்த என்பதற்கு வேறு வகையாகவும் பொருளுரைப்பர்; தன் விஷயமான பாசத்தை என் பக்கலிலே (எனக்கு) உண்டாக்கின என்று.

 

English Translation

Does it behove his glory to be praised by me, -lowly and mertless? Yet I have his love!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top