(3136)

(3136)

வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,

சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,

கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த

எந்தாய்,யானுன்னை எங்குவந் தணுகிற்பனே?

 

பதவுரை

வந்தாய் போலே வந்தும்

–

(ப்ரஹ்லாதன் கஜேந்திரன் முதலானார்க்கு) வந்து தோன்றினாய் போலே வந்தாகிலும்

என் மனத்தினை

–

எனது நெஞ்சை

சிந்தாமல்

–

சிதிலமாகாதபடி

நீ செய்தாய்

–

நீ செய்வதில்லை

இதுவே

–

உதவி செய்யாமையாகிற இதுவே

இது ஆகில்

–

இப்படியே நீடித்திருக்குமாகில்

கொந்து ஆர்காயாவின் கொழுமலர் திரு நிறைத்த எந்தாய்

–

கொத்துக்கள் நிறைந்த காயாவினுடைய செழுமை தங்கிய பூவின் நிறம்போன்ற நிறத்தையுடைய ஸ்வாமியே!

(இப்படிப்பட்ட அழகை அநுபவித்தே தரிக்கவல்ல) அடியேன்.

உன்னை

–

உன்னை

எங்கு

–

எவ்விடத்து

வந்து அணுகிற்பன்

–

வந்து கிட்டவல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  (வந்தாய்போலே) கீழ்ப்பாட்டில் “நின்தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். “ஆழ்வீர்! வந்தருளவேணும் வந்தருளவேணுமென்னா நின்றீர்; ஒரு கால் வந்து (இராமனாய்) பதினோராயிரமாண்டு இருந்தோம்; மற்றொருகால் வந்து (க்ருஷ்ணனாய்) நூற்றாண்டிருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது ப்ரயாஸமாயிருக்கிறது காணும் என்ன; அதுகேட்ட ஆழ்வார், ‘பிரானே! அவ்வவதாரங்கள் போலே எனக்காகவும் வந்து சில நாளிருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் அழகியது; அது செய்யத் திருவுள்ளமில்லையாகில் ஆனைக்குத் தொற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும் எனக்குமொருகால் தோற்றியருளியாகிலும் உதவ வேணுமென்கிறார்.

வந்தாய்போலே வந்தும் என்றது ப்ரஹ்லாத கஜேந்த்ராதிகளுக்கு வந்தாப்போலேயாகிலும் வந்து என்றபடி. ஆனைக்கு அருள் செய்ததுபோலே எனக்கும் அருள் செய்து என் ஆர்த்தியைப் பரிஹரிக்கின்றிலை; இப்படி உதவாமையாகிறவிதுவே நித்தியமாய்ச் சொல்லுமாகில், நான் என்னுடைய முயற்சியினால் உன்னை வந்து சேருகையென்று ஒரு பொருளுண்டோ? இனி உன்னுடைய வடிவழகைக் காணப்பெறாதே இழந்து போமித்தனையன்றோ! என்றாறாயிற்று

 

English Translation

My Lord of Kaya-blossom hue!  You seem to come, my radiant Lord, but never stay! O, How now can I join you, if you do not stay and give me strength?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top