(3136)
வந்தாய்போ லேவந்தும் என்மனத் தினைநீ,
சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்,
கொந்தார்க்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்,யானுன்னை எங்குவந் தணுகிற்பனே?
பதவுரை
|
வந்தாய் போலே வந்தும் |
– |
(ப்ரஹ்லாதன் கஜேந்திரன் முதலானார்க்கு) வந்து தோன்றினாய் போலே வந்தாகிலும் |
|
என் மனத்தினை |
– |
எனது நெஞ்சை |
|
சிந்தாமல் |
– |
சிதிலமாகாதபடி |
|
நீ செய்தாய் |
– |
நீ செய்வதில்லை |
|
இதுவே |
– |
உதவி செய்யாமையாகிற இதுவே |
|
இது ஆகில் |
– |
இப்படியே நீடித்திருக்குமாகில் |
|
கொந்து ஆர்காயாவின் கொழுமலர் திரு நிறைத்த எந்தாய் |
– |
கொத்துக்கள் நிறைந்த காயாவினுடைய செழுமை தங்கிய பூவின் நிறம்போன்ற நிறத்தையுடைய ஸ்வாமியே! |
|
(இப்படிப்பட்ட அழகை அநுபவித்தே தரிக்கவல்ல) அடியேன். |
||
|
உன்னை |
– |
உன்னை |
|
எங்கு |
– |
எவ்விடத்து |
|
வந்து அணுகிற்பன் |
– |
வந்து கிட்டவல்லேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (வந்தாய்போலே) கீழ்ப்பாட்டில் “நின்தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். “ஆழ்வீர்! வந்தருளவேணும் வந்தருளவேணுமென்னா நின்றீர்; ஒரு கால் வந்து (இராமனாய்) பதினோராயிரமாண்டு இருந்தோம்; மற்றொருகால் வந்து (க்ருஷ்ணனாய்) நூற்றாண்டிருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது ப்ரயாஸமாயிருக்கிறது காணும் என்ன; அதுகேட்ட ஆழ்வார், ‘பிரானே! அவ்வவதாரங்கள் போலே எனக்காகவும் வந்து சில நாளிருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் அழகியது; அது செய்யத் திருவுள்ளமில்லையாகில் ஆனைக்குத் தொற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும் எனக்குமொருகால் தோற்றியருளியாகிலும் உதவ வேணுமென்கிறார்.
வந்தாய்போலே வந்தும் என்றது ப்ரஹ்லாத கஜேந்த்ராதிகளுக்கு வந்தாப்போலேயாகிலும் வந்து என்றபடி. ஆனைக்கு அருள் செய்ததுபோலே எனக்கும் அருள் செய்து என் ஆர்த்தியைப் பரிஹரிக்கின்றிலை; இப்படி உதவாமையாகிறவிதுவே நித்தியமாய்ச் சொல்லுமாகில், நான் என்னுடைய முயற்சியினால் உன்னை வந்து சேருகையென்று ஒரு பொருளுண்டோ? இனி உன்னுடைய வடிவழகைக் காணப்பெறாதே இழந்து போமித்தனையன்றோ! என்றாறாயிற்று
English Translation
My Lord of Kaya-blossom hue! You seem to come, my radiant Lord, but never stay! O, How now can I join you, if you do not stay and give me strength?
