(3130)
மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே,
முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்,
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே?
பதவுரை
|
மறை ஆய |
– |
மறை பொருள்களையுடையவையான |
|
நால் வேதத்துள் நின்ற |
– |
நான்கு வேதங்களுக்கும் உள்ளுறை பொருளாய் நின்ற |
|
மலர் சுடரே |
– |
விகாஸத்தையுடைய சோதி வடிவானவளே! |
|
முறையால் |
– |
முறைப்படி |
|
இ உலகு எல்லாம் |
– |
இவ்வுலகங்களை யெல்லாம் |
|
படைத்து |
– |
ஸ்ருஷ்டித்து |
|
இடந்து |
– |
(பிரளயத்திலே புக்கு) இடந்தெடுத்து |
|
உண்டு |
– |
(மஹாப்ரளயத்திலே) திருவயிற்றிலே வைத்து நோக்கி |
|
உமிழ்ந்து |
– |
(பிறகு) வெளிப்படுத்தி |
|
அளந்தாய் |
– |
(வாமன மூர்த்தியாய்) அளந்துகொண்ட பெருமானே! |
|
பிறை ஏறு சடையானும் |
– |
சந்திரகலை தங்கிய சடையையுடையனான சிவபிரானும் |
|
நான்முகனும் |
– |
நான்முகக்கடவுளும் |
|
இந்திரனும் |
– |
தேவேந்திரனும் |
|
இறை ஆதல் அறிந்து ஏத்த |
– |
நீயே ஸர்வஸ்வாமி யென்னுமிடத்தை யுணர்ந்து துதிக்குமாறு |
|
வீற்றிருத்தல் இது |
– |
எழுந்தருளியிருக்குமிருப்பு |
|
வியப்பே |
– |
ஆச்சரியமோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரமன் முதலானாரும் உன் சேஷித்வத்தையறிந்து ஆச்ரயிக்குமாறு நீ யிருக்கு மிருப்பு ஆச்சரியமோ வென்கிறார். “மறையினுள் நின்ற” என்றாவது “நால்வேதத்துள் நின்ற” என்றாவது சொன்னால் போதுமே; ‘மறையாய நால்வேதம்’ என்பானேன்? என்னில்; கேண்மின்; வேதம் என்றாலும் மறை என்றாலும் பர்யாயம் எனினும் அர்த்தஸக்தியில் வாசியுண்டு; வேதம் என்றால் விளங்கக்காட்டுவது என்று பொருள்;மறை என்றால் மறைத்துக் காட்டுவது என்று பொருள். ஆஸ்திகராயிருப்பாருக்குத் தன் அர்த்தங்களை வெளியிட்டு காட்டுதலால் வேதம்; பாஹ்யராய் நாஸ்திகரா யிருப்பார்க்கு மறைத்தலால் மறை; ஆகவே, மறையாய நால்வேதமென்றது தகுதியே. “துஷ்ப்ரக்ருதிகளுக்கு மறையாய் ஸத்ப்ரக்ருதிகளுக்கு வேதமாயிருக்கும்” என்றார் பெரியவாச்சான்பிள்ளையும்.
முறையால்- உலகுக்கெல்லாம் ஸ்வாமியான முறைமையினால்; (அல்லது) பர்யாயந்தோறும்.
பின்னடிகட்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின் :- “ஒருவன் ஒரு குழுமணனைப் பண்ணி அதின் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி, அதின் தலையிலே காலை வைத்து ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாபோலே ‘நன்மைப் புனல்பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறபடியே உன்னாலே மனையப்பட்ட ப்ரஹ்மாவும் அவனாலே ஸ்ருஷ்டரான விவர்களும் உன்னையேத்த அத்தாலே இறுதமாந்திருந்தாயென்றால் இது உனக்கு ஏற்றமோ? ஹாஸ்யமாய்த் தலைகட்டுமத்தனையன்றோ.” வியப்பே- வியப்பன்று என்றபடி.
English Translation
O Radiant lotus-Lord extolled by the Vedas! You ate, made, remade, lifted, and strode the Earth! Even if Siva, Brahma and indra stand and worship, would your wonder ever stand exhausted?
