(3114)
திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது *
அறமுயலாழிப் படையவன் கோயில் *
மறுவில் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை *
புறமலைசாரப் போவதுகிறியே.
பதவுரை
|
திறம் உடை |
– |
பலவகைப்பட்ட |
|
வலத்தால் |
– |
வலிமையைக் கொண்டு |
|
தீவினை |
– |
பாவங்களை |
|
பெருக்காது |
– |
மிகையாகச் செய்யாமல் |
|
அறம் முயல் ஆழி படையவன் கோயில் |
– |
ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய். |
|
மறு இல் |
– |
அழுக்கற்ற |
|
வண் சுஐன சூழ் |
– |
வளமான களைகளால் சூழப்பட்ட |
|
மாலிருஞ்சோலை |
– |
திருமாலிருஞ் சோலையினுடைய |
|
புறம் மலை |
– |
பக்கத்திலுள்ள தொருமலையை |
|
சார |
– |
கிட்டுமாறு |
|
போவது |
– |
போவதானது |
|
கிறி |
– |
நல்ல உபாயம். |
English Translation
The Lord of discus in Maliumsoali amaid groves and sweet – water lakes destros evil by the power of his will. Reaching hat hill is our only karma.
