(3104)

(3104)

மகிழ்கொள் தெய்வ முலோகம் அலோகம்,

மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே,

மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு, என்றும்

மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே.

 

பதவுரை

மகிழ் கொள்

மகிழ்ச்சியைக் கொண்ட

தெய்வம்

தேவ வர்க்கமும்

உலோகம்

ஞான வொளியையுடைய மானிட வர்க்கமும்

அலோகம்

ஞானவொளியில்லாத விலங்கு தாவரம் என்பவையும்

மகிழ்கொள் சோதி

உலகுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற சோதிப்பொருள்களான சந்திர ஸூரியர்களும்

மலர்ந்த

(நன்னிடத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற)

அம்மானே

ஸர்வேச்வரனே

மகிழ் கொள் சிந்தை

அன்பு கொண்ட நினைவையும்

சொல்

சொல்லையும்

கொண்டு

ஏற்றுக்கொண்டு

என்றும்

எக்காலத்திலும்

மகிழ்வுற்று

மகிழ்ச்சியுடன்

உன்னை வணங்க

உன்னை வணங்கும்படி

வாராய்

(என்னெதிரே) எழுந்தருள வேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாசுரத்திற்கு இரண்டுவகையாக அவதாரிகை கூறுவர்;- தேவர் மனிதர் முதலிய பதார்த்தங்களைப் படைத்ததுப்போலே, என்னையும் உன்னை யநுபவிப்பேனாம்படி பண்ணவேணு மென்கிறார்; அன்றியே, தேவாதி பதார்த்தங்களுக்கு ஒவ்வொரு ஸ்வபாவம் நியதமர்ம்படி பண்ணிணனாப்போலே, எனக்கு உன்னை யநுபவிக்குமது நியதஸ்வபாவமாமபடி பண்ணியருள வேணுமென்கிறார். (தாற்பாரியமாகத் தேறுவது ஒன்றே) முன்னிரண்டடிகளிலுள்ள பகவத்ஸம்போதநம் ஸாபிபராயம். ஆனந்தமே வடிவான தேவவர்க்கமென்ன, ஞானவொளியோடு கூடிய மநுஷ்யவர்க்கமென்ன. அஃதில்லாத திர்யக் ஸ்தாவரவர்க்கமென்ன, தேஜஸ்விகளான சந்த்ரஸூர்யாதி சுடர்ப்பொருள்களென்ன, ஆகிய இவற்றையெல்லாம் படைத்தவனே! என்று சொல்லி விளித்ததானது, பின்னடிகளிற் சொல்லப்படுகிற பொருளுக்கு உபஷ்டம்பகமாகும் இப்படியெல்லாம் விசித்ர ஸ்ருஷ்டிகளைப் பண்ணவல்ல நீ, என்னுடைய ஹ்ருதயம் உன்னையநுபவித்து மகிழ்ச்சியை யுடையதாம்படி பண்ணவேணும் என்னுடைய வாக்குவ்யவ ஹாரமும் அப்படியேயாகப் பண்ணவேணும் என்னுடைய வியாபாரமும் உகப்போடு செய்யும் கைங்காரியமாகவேணும், என்று மிப்படி நானுன்னையநுபவிக்குமாறு வந்தருளவேணும்-என்றாராயிற்று.

உலோகம் அலோகம் என்கிற பதங்களுக்குப் பொருளுடைப்பதில் அபிப்ராய பேதமுண்டு (உலோகம் என்றது லோகம் என்றபடி. லோக மென்றது வடசொல் காணப்படுகிற வஸ்து என்றபடி. கண் முதலிய உறுப்புக்களால் காணப்படுவன அசேதனப் பொருள்களாகையால் உலோகமென்று அசித்வஸ்துவாசகம். அலோகம்-முன்சொன்ன அசித்வஸ்துவை க்ரஹிக்கவல்ல உறுப்பகளால் க்ரஹிக்கப்படாதே சாஸ்தா மொன்றினாலேயே க்ரஹிக்கப்படுவது, ஆத்மவஸ்து என்றபடி. இங்ஙனே பொருள் கொள்வர் இருபத்தினாலாயிரத்திலும் முப்பத்தாறாயிரத்திலும் பன்னீராயிரப்படி யுரைகாரர், “உலோகம்-ஜ்ஞாந ப்ரகாச யுக்தமர்ன மநுஷ்யவர்க்கம் அலோகம்-ப்ரகாச ரஹிதமர்ன திர்யக்ஸ்தாவரங்கள் உலோகமலோகமென்று சேதநாசேதநங்களாகவுமாம்.”

 

English Translation

O Lord, blossom of radiant joy pervading celestials, mortals and things! Come that we may worship you joyously with sweet thoughts, words and deeds.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top