(3099)

(3099)

எம்மாவீட்டுத் திறமும்செப்பம், நின்

செம்மாபாதபற்புத் தலைசேர்த்தொல்லை,

கைம்மாதுன்பம் கடிந்தபிரானே,

அம்மாவடியென் வேண்டுவதீதே.

 

பதவுரை

கைம்மா துன்பம் கடிந்த பிரானே

–

கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே!

நின்

–

தேவரீருடைய

செம்

–

சிவந்த

மா

–

மேன்மை தங்கிய

பாதபற்பு

–

பாதபத்மங்களை

தலை

–

என் தலையிலே

ஒல்லை

–

சீக்கிரமாக

சேர்ந்து

–

சேர்க்கப்பெறறால்

எமர்வீடு திற

–

மிகவும் விலக்ஷணமான மோக்ஷத்தைப் பற்றின பேச்சையும்

செப்பம்

–

பிரஸ்தாவிக்கமாட்டோம்

அம்மா

–

ஸ்வாமியே!

அடியேன் வேண்டுவது

–

நான் பிரார்த்திப்பது

ஈதே

–

இதுதான். (நின் செம்மாபாதபற்புத்தலை சோக்க வேணுமென்பதே யென்றபடி)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! உன்திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லையென்கிறார். பாசுரந் தொடங்கும்போதே எம்மாவீட்டுத் திறமும் செப்பம் என்கிறார்- தம்முடைய அத்யவஸாயத்தின் உறைப்பை உபக்ரமத்திலேயே நன்குகாட்டுகிறபடி. ‘எம்முடைய’ என்னும் பொருள்தான் சுட்டு அது என்றுணர்க. எல்லாப் படியாலும் விலக்ஷணமான மோக்ஷணத்தைக் கொடுத்தாலும் வேண்டா, என்றபடி.

செப்பம் என்றது தன்மைப் பன்மையெதிர்மறை வினைமுற்று; செப்போம் என்றவாறு. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி-“ஒரு தமிழன் ‘எம்மாவீட்டு விகல்பமும் செவ்வியவாம்’ என்றான்; அந்த பக்ஷத்திலே வீட்டு விகல்பமாவது, ஸாலோக்ய ஸாரூப்ய ஸாயுஜ்ய மென்கிறவை; செவ்வியவாகையாவது ஸாலோக்யாதிகளெல்லாம் இம்மோக்ஷத்திலே யுண்டாகை”  என்றுள்ளது. இதுவொரு நிர்வாஹம், திருப்பாவையில் “செப்பமுடையாய்” என்றும், திருவாய்மொழியாலேயே ஏழாம்பத்தில் “செப்பமே செய்து” என்றும், திருவாய்மொழியாலேயே ஏழாம்பத்தில் “செப்பமே செய்து” என்றும் உள்ளவிடங்களிலே செப்பம் என்பது பெயர்ச்சொல்லாகவுள்ளதன்றோ; அப்படியே இங்கும் இருப்பதாகக்கொண்டு இந்த நிர்வாஹம். இப்போது செப்பம் என்பதற்கு’ நன்றாக வுள்ளது’ என்று கருத்துத் தேறும். நின் செம்மாபாதபற்பை என் தலைமேல் சேர்த்தால், நான்கு விதமர்ன மோக்ஷ ஸாம்ராஜ்யங்களும் இதிலேயே அடங்கிவிட்டனவாகும், என்பது தேர்ந்த கருத்து.

பாதபற்பு-பாதபத்மம். ‘பத்மம்’ என்னும் வட சொல் பற்பு எனத் திரிந்தது.

 

English Translation

My Lord, you ended Gajendra’s woes! I seek no heaven for myself.  Grant me your lotus-red feet to wear on my head, Quick!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top